செல்போனில் செக்ஸ் தொல்லை கொடுத்தவரை போட்டுக் கொடுத்த நடிகை!
செல்போனில் ஆபாச வீடியோவாக அனுப்பி, தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவரின் புகைப்படம் மற்றும் தகவலை வெளியிட்டு, தைரியாமாகப் போட்டுக் கொடுத்துளார் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா. அவர் தனது பேஸ்புக் பக்கட்தில் ‘தில்’லாக இதனை வெளியிட்டுள்ளார்.
நடிகைகள் என்றாலே ரசிகர்கள் எனும் பெயரில் சமூக வலைத்தளங்களில் உள்ள பலரும் தங்கள் பாலியல் வக்கிர உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் உடல் ரீதியான கருத்துகளை பகிர்வது, மோசமாக பேசுவது, திட்டுவது, ஆபாச புகைப்படங்களை அனுப்புவது என்று செயல்பட்டுக் கொண்டிருப்பார்கள். இவற்றை சில நடிகைகள் கண்டும் காணாதது போல் கடந்து போய் விடுவார்கள். சிலர் மட்டுமே துணிச்சலாக தங்களுக்கு இந்த இணைய உலகில் நடக்கும் அவமானங்களை வெளிச்சம் போட்டுக் காட்டுவார்கள்.
இப்படி ஒரு மோசமான நிகழ்வைத்தான் கேரள சினிமா உலகில் நடிகையாகத் திகழும் துர்கா கிருஷ்ணா சந்தித்திருக்கிறார். விமானம் என்ற மலையாளப் படத்தில் நடிகர் பிருத்விராஜுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் மலையாள நடிகை துர்கா கிருஷ்ணா.
அவருக்கு ஒருவர் ஆபாச வீடியோவாக அனுப்பி உள்ளார். இதைக்கண்டு அதிர்ச்சியான அவர் ஆபாச வீடியோ அனுப்பியவரின் புகைப்படத்தை தைரியமாக பேஸ்புக்கில் வெளியிட்டு, ஒரு கருத்தையும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அவர் தன்னுடைய பேஸ்புக்கில் ஒரு ஸ்க்ரீன்ஷாட்டை ஷேர் செய்து, ஒரு கருத்தையும் வெளியிட்டுள்ளார். அதில், உங்களில் எத்தனை பேர் சகோதரர்களாக, உண்மையான சகோதரர்களாக இருக்கிறார்கள்... சிலர் குள்ள நரித்தனமாக பகலில் நல்லவர்களாக, இரவானால் உண்மையான நிறத்துடன் பாலியல் கொச்சை உணர்வுகளை வெளிப்படுத்துபவர்களாக இருக்கிறார்கள்... அவர்களுக்கு, மனைவி, சகோதரி, அம்மா, 2 வருட குழந்தை, 70 வயது மூதாட்டி என வித்தியாசம் தெரிவதில்லை.... என்றெல்லாம் வறுத்தெடுத்திருக்கும் துர்கா கிருஷ்ணா, தன்னிடம் மோசமாக நடந்து கொண்ட ஒருவரைக் குறித்தும் தகவல் பதிவிட்டுள்ளார். மேலும், இந்த சைக்கோவிடம் இருந்து உங்களின் சகோதரிகளை காப்பாற்ற நடவடிக்கை எடுங்கள். இதுபோன்றவர்களை தண்டிக்க கோரி அரசிடம் மனு அளிக்க வேண்டும். அப்போதுதான் பாலியல் தொல்லைகளில் இருந்து பெண்களைக் காப்பாற்ற முடியும்.... என்று கூறியுள்ளார். மேலும், அந்த நபரின் பேஸ்புக் ஐடி.,யையும் கூடவே பதிவு செய்துள்ளார்.
சென்ற அக்.8ம் தேதி அவர் பதிவு செய்திருந்தபோதும், அவரது துணிச்சலைப் பாராட்டி பலரும் சமூக ஊடகங்களில் கருத்து சொல்ல, இப்போது இந்த விஷயம் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.