காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்புவும், நடன இயக்குநரும் பாஜகவைச் சேர்ந்தவருமான காயத்ரி ரகுராமும் டுவிட்டரில் அடிக்கடி மோதிக்கொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை வைத்து இருவரும் சண்டை போட்டுக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். சமீபத்தில் அப்படி குஷ்பு போட்ட ட்வீட்டிற்கு காயத்ரி ரகுராம் நக்கலாக பதிலளித்துள்ளார். 

இதையும் படிங்க: "கில்லி" படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த ஜெனிபரா இது?... கொழு,கொழு அழகில் கும்முனு நடத்திய ஹாட் போட்டோ ஷூட்...!

சமீபத்தில் பாரத பிரதமர் மோடி அவர்கள் சோசியல் மீடியாவில் இருந்து விலகி விடலாம் என்று நினைக்கிறேன் என ட்வீட் செய்திருந்தார். அதை கிண்டல் செய்யும் விதமாக நடிகையும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான குஷ்பு, நான் அடுத்த ஞாயிற்றுக்கிழமையில் இருந்து ஐஸ்கிரீம் சாப்பிடுவதை விட்டுவிடலாம் என்று இருக்கிறேன் என்று ட்வீட் செய்திருந்தார். 

இதையும் படிங்க: படுக்கையை வாரிச் சுருட்டிக் கொண்டு காட்டிற்கு போன இடுப்பழகி ரம்யா பாண்டியன்... வைரலாகும் ஹாட் போட்டோ...!

இதற்கு பாஜக தொண்டர்கள் பலரும் கோபமாக கமெண்ட் செய்து வந்தனர். குஷ்புவின் அந்த பதிவிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக காயத்ரி ரகுராம், நல்லது கொழுப்பு குறையும் என கிண்டலாக பதிவிட்டுள்ளார். குஷ்புவை மரண கலாய், கலாய்த்து காயத்ரி ரகுராம் போட்ட அந்த ட்வீட் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.