ரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்து உள்ளார் 

நடிகர் கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆரம்ப காலக்கட்டத்தில் தன்னுடன் கதாநாயகியாக நடித்து இன்று வரை அதே நட்புடன் கமலுடன் பழகி வருபவர் நடிகை ஸ்ரீ பிரியா.

இவர் பிக்பாஸ் சீசன் நடைப்பெற்ற போது கூட நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு சில கருத்துகளை தெரிவித்து இருந்தார்.பின்னர் கமல் மக்கள் நீதி மய்யம் தொடங்கிய உடன் கட்சியில் இணைந்துக்கொண்டார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் உயர்மட்ட குழு உறுப்பினராக தற்போது ஸ்ரீபிரியா உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் ஆரம்ப காலக்கட்டத்தில் கமல் மற்றும் ரஜினி இருவருடனும் கதாநாயகியாக நடித்தவர்.

தற்போது கமல் மற்றும் ரஜினி இருவருமே அரசியலில் இறங்கி உள்ள சமயத்தில், கமல் கட்சியில் இணைந்து செயல்பட ஆர்வம் காட்டுவது ஏன் என்ற கேள்விக்கு ரஜினியின் கருத்தை ஏற்க முடியாத காரணத்தால் தான் கமலுடன் இணைந்து செயல்படுகிறேன் என நடிகை ஸ்ரீபிரியா தெரிவித்து உள்ளார்.இவரின் இந்த கருத்துக்கும் பல்வேறு விமர்சங்கள் எழுந்துள்ளது.