சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமான ப்ரஜின், தற்போது சீரியலில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், இதுவரை தன்னுடைய இரட்டை குழந்தைகள் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த இந்த நட்சத்திர தம்பதிகள் முதல் முறையாக தங்களுடைய குழந்தைகள் புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். 

ப்ரஜின் - சாண்ட்ரா இருவரும், தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்களாக இருந்தாலும் கூட, இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்ட ஆரம்ப காலத்தில், படத்திலும், சின்னத்திரையுலும் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் பல்வேறு கஷ்டங்களை மேற்கொள்ள நேர்ந்தது.

இதனால், குழந்தை பெற்று கொள்வதையும் இருவரும் தள்ளி போட்டுக்கொண்டே வந்தனர். மேலும் சாண்ட்ரா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடித்த தலையணை பூக்கள் சீரியல் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதை தொடர்ந்து இவருடைய கணவர் ப்ரஜின் நடிப்பில் தற்போது விஜய் டிவி தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகி வரும் 'சின்னத்தம்பி' சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சின்னத்திரையில் நிலையான இடத்தை பிடித்து விட்டதால், திருமணமாகி பத்து வருடங்களுக்கு பின், குழந்தை பெற்று கொள்ள முடிவு செய்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது. இதனால் கணவன் மனைவி இருவருமே மிகவும் மகிழ்ச்சியாக உள்ளனர்.

 

இதுவரை தங்களுடைய குழந்தைகள் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்த இவர்கள், தற்போது ஒரு புதிய ட்விஸ்ட் வைத்து, தங்களுடைய குழந்தையை ரசிகர்களுக்கு காட்டியுள்ளனர். இந்த புகைப்படத்தில், தங்களுடைய இரண்டு குழந்தைகளையும் கையில் வைத்துள்ளார் சாண்ட்ரா. ஆனால் இந்த புகைப்பதிலும் குழந்தைகள் முகம் மட்டும் தெரியவில்லை. இது ரசிகர்களுக்கு சிறு வருத்தம் என்றே கூறலாம்.