இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான் இரண்டு பிரமோ இதுவரை வெளியாகி இருந்தது.இந்த இரண்டு பிரமோவிலும் ஐஸ்வர்யா செய்யும் அலும்பல்களால் பிக் பாஸ் வீடே களேபரமாகி இருக்கிறது. சர்வாதிகாரம் வந்த உடன் சக போட்டியாளர்களின் மீது உள்ள கடுப்பை எல்லாம் ஏகமாக காட்டி பழிவாங்கி வருகிறார் ஐஸ்வர்யா. இதனால் அவர் மீது பார்வையாளர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டிருக்கிறது.

பாலாஜி தலையில் குப்பையை கொட்டுவது. ரித்விகா, ஷாரிக் போன்றோரது உடைகளை நீச்சல் குளத்தில் எறிவது போன்ற அவரது நடவடைக்கைகள் பார்ப்பதற்கே எரிச்சலை ஏற்படுத்துகிறது. என புலம்புகின்றனர் பிக் பாஸ் ரசிகர்கள்.

இந்நிலையில் இன்றைய பிரமோவில் அவர் சென்றாயனிடம் மிகவும் திமிராகவும், விடாப்பிடியாகவும், சண்டையிடுவது போன்ற காட்சிகள் வேறு இடம் பெற்றிருந்தது. மேலும் அவர் சென்றாயனை தொடர்ந்து வெறுப்பேற்றியதுடன் நாய் என்றும் திட்டி இருக்கிறார். இதனால் கோபத்தில் வெடிக்கிறார் சென்றாயன். இது போக தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் பிரமோவில் ஷாரிக் மற்றும் மும்தாஜ் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டிருக்கிறது.

 

அட ஏம்மா கத்துற 🙉🙉 #பிக்பாஸ் - தினமும் இரவு 9 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #VivoBiggBoss #VivoIndia pic.twitter.com/NYjA7HmtqV

— Vijay Television (@vijaytelevision) August 1, 2018

இதில் ஷாரிக் மும்தாஜிற்கு லிப்ஸ்டிக் போட்டு விட முயற்சி செய்கிறார். இது போன்ற செயல்களால் கடுப்பான மும்தாஜ் கோபப்படுகிறார். தொடர்ந்து அவருக்கு லிப்ஸ்டிக் போட்டுவிட முயல்கிறார் ஷாரிக். இதில் மும்தாஜுக்கும் ஷாரிக்கிற்கும் சண்டை வலுக்கிறது. இதனிடையே ஐஸ்வர்யா வேறு யாரும் யாரையும் தாக்கி கொள்ளாதீர்கள் என ஆக்ரோஷமாக கத்துகிறார்.

ஐஸ்வர்யாவின் முகத்தில் கொந்தளிக்கும் கோபத்தை பார்க்கும் போது அவர் சரியான மனநிலையில் இல்லையோ, என்று கூட தோன்றுகிறது. பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தாலே இப்படி தான் ஆகிடுவாங்க போல என பிக் பாஸ் ரசிகர்களை கலங்கடித்திருக்கிறது இந்த பிரமோ.