பெப்சி வேலை நிறுத்தம் வாபஸ் !! இன்று முதல் மீண்டும் தொடங்குகிறது படப்பிடிப்பு !!!
ஒப்பந்தப்படி ஊதியம் வழங்கவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 1 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த பெப்சி தொழிலாளர்கள் இன்று அதனை வாபஸ் பெற்றுக் கொண்டனர்.
பெப்சி அமைப்பில் 25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த தொழிலாளர்களுக்கு ஊதியத்தை தர மறுப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பிரச்னைகனை முன்வைத்து கடந்த 1 ஆம் தேதி முதல், பெப்சி அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் ரஜினி நடிக்கும் காலா, விஜய் நடிக்கும் மெர்சல் உள்ளிட்ட 35 படங்களின் படப்பிடிப்புகள் ரத்தாகியுள்ளன.
இந்நிலையில்நேற்று பெப்சி தொழிலாளர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் ஆகியவை இடையே நடைபெற்ற பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்த இன்று வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இதையடுத்து இன்று முதல் மீண்டும் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் தொடங்குகின்றன.