அமெரிக்காவை சேர்ந்த, ஹாலிவுட் நடிகை வனேஸா மார்கியூ என்பவர், துப்பாக்கியை  வைத்துக் கொண்டு மிரட்டியதால், போலீசார் அவரை சுட்டுக் கொன்ற சம்பவம் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்காவில் ஒளிபரப்பாகும் இஆர் எனும் தொடரில் நடித்துப் புகழ்பெற்ற நடிகை வனேஸா மார்கியூ, சில ஹாலிவுட் திரைப்படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
இவர் தன்னுடைய குடும்பத்தினருடன், அமெரிக்காவின் கலிபோர்னியா,சவுத் பாஸதேனா நகரில் வசித்து வந்தவர்.

இந்நிலையில், வனேஸா மார்க்யூ சமீப காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். திடீர் என இவரிடம் சில மாற்றங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் மிகவும் ஆவேசமாக இவர் காணப்பட்டார். இது குறித்து அறிந்த வீட்டின் உரிமையாளர் போலீஸாருக்கும், மருத்துவக்குழுவிற்கும் தகவல் அளித்தார்.

உடனடியாக விரைந்த போலீசார் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மார்க்யூவிற்கு கவுன்ஸ்லிங் அளித்தனர். ஆனால், அவர் சற்றும் எதிர்ப்பார்க்க முடியாத போது மருத்துவக் குழுவையும், போலீஸாரையும் நெருங்கவிடாமல் கையில் துப்பாக்கி வைத்து மிரட்டிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் போலீஸாரை நோக்கி துப்பாக்கியால் சுட முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால், போலீசார் வேறுவழியின்றி தங்களை காப்பாற்றிக் கொள்ளவும், அவரால் மற்றவர்களுக்கு எதுவும் ஆகாமல் தடுக்கவும் மார்க்யூவை துப்பாக்கியால் சுட்டு அவரிடம் இருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். அதன்பின்பு தான் தெரிய வந்தது மார்க்யூ கையில் இருந்தது பொம்மை துப்பாக்கி என்று. இதையடுத்து உடனடியாக மார்க்யூவை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து மார்க்யூவின் தோழி டெரன்ஸ் டோவல்ஸ் கூறுகையில், " வனேஸா மார்கியூ கடந்த சில மாதங்களாகவே மன உளைச்சல் காரணமாக பாதிக்கப்பட் காணப்பாட்டார். மேலும் பணப்பிரச்சனையும் அவருக்கு இருந்தது. 

இதனால் அவருக்கு அவருடைய குடும்பத்தினர் அவரை மருத்துவ மனையில் அனுமதித்து உரிய சிகிச்சை அளித்து வந்தனர். அவள் சுய நினைவில் இருந்திருந்தால் கண்டிப்பாக ஒரு போது இப்படி நடந்து கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் அவர் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பது கூட அறியாமல் அவரை போலீசார் அவளுடைய உயிரை பறித்துவிட்டனர். ஆஸ்கர் விருது பெற வேண்டும் என்று ஆசையில் இருந்த ஒரு சிறந்த கலைஞரை இழந்து விட்டோம் என கூறியுள்ளார்.

இவருடைய எதிர்ப்பாராத மரணம் ஹாலிவுட் திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.