பிரபல நடிகை மான்வி கக்ரூ பல வருடங்களுக்கு பின், தயாரிப்பாளர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விஷயத்தை வெளிப்படையாக கூறியுள்ளார்.

இவர் சமீபத்தில் பிரபலமான அமேசான் பிரைம் வலைத் தொடரான ​​'ஃபோர் மோர் ஷாட்ஸ் ப்ளீஸ்' இல் நடித்து வரும் பாலிவுட் நடிகிகளில் ஒருவர் மான்வி கக்ரூ. இவருக்கு ஏற்கனவே  ஒரு வலைத் தொடர் தயாரிப்பாளர் கொடுத்த தொந்தரவை தான் இப்போது பகிர்ந்துள்ளார்.

ஒரு புதிய வலைத் தொடர் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்தது. அதில் 'நாங்கள் ஒரு வலைத் தொடரை தயாரிக்க உள்ளோம், அதில் உங்களை நடிக்க வைக்க விரும்புவதாக தெரிவித்தார். ' அவர் என்னிடம் பட்ஜெட் பற்றி சொன்னபோது அது மிகவும் குறைவு என கூறினேன்.

எனினும் பட்ஜெட்டைப் பற்றி பிறகு பேசலாம்,  ஸ்கிரிப்டைச் சொல்லுங்கள் என ஆர்வமாக கேட்டேன். பின் அவர் நான் சொல்லும் நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டால் பணத்தைப் பற்றி விவாதிக்க முடியும் என கூறியவர், திடீர் என தனக்கு பேசிய தொகையை மூன்று மடங்கு உயர்த்தி கூறினார்.

பின் வெளிப்படையாகவே தன்னிடம் படுக்கையை அவர் பகிர்ந்து கொள்ளும் படி கூறியதாக, அந்த தயாரிப்பாளர் பற்றி, மான்வி கக்ரூ சில வருடங்களுக்கு பின் கூறியுள்ளார்.