Asianet News TamilAsianet News Tamil

பிரபல நடிகரின் விடுதிக்கு அதிரடியாக 'சீல்' வைத்த அதிகாரிகள்...!

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் இருந்த பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி உற்பட 11 விடுதிகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

famous actor cottage rooms sealed
Author
Chennai, First Published Aug 27, 2018, 7:02 PM IST

நீலகிரியில் யானைகள் வழித்தடத்தில் இருந்த பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான விடுதி உற்பட 11 விடுதிகளுக்கு அதிகாரிகள் அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள மசினகுடி, பொக்காபுரம், சிங்காரா, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் யானைகள் வழி தடத்தில் உள்ள விடுதிகளை அகற்ற வேண்டும் என ஐகோர்ட் உத்திர விட்டது. இதை எதிர்க்கும் விதத்தில் உரிமையாளர்கள் தொடர்ந்து மேல் முறையீடு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 39 விடுதிகளில்  27 விடுதிகளுக்கு 48 மணி நேரத்தில் 'சீல்' வைக்கவும் மீதமுள்ள 12 விடுதிகளின் ஆவணங்களை சரி பார்த்து அனுமதி இல்லையெனில் 'சீல்' வைக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளது.

famous actor cottage rooms sealed

அதில் பத்து விடுதிகள் முறையான அனுமதி இல்லாமல் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டது. மேலும் பொக்காபுரத்தில் உள்ள இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்களுக்கு முறையான அனுமதி இல்லை என்பது தெரியவந்தது. 

அதைத்தொடர்ந்து 12 விடுதிகளுக்கு உள்ள அனுமதியற்ற கட்டிடங்களை காலி செய்ய அதன் உரிமையாளர்களுக்கு 24 மணி நேர 'கெடு' விதித்தது.famous actor cottage rooms sealed

இந்நிலைலயில் நேற்று உயர் அதிகாரிகள் தலைமையிலான மூன்று குழுவினர் மீதமுள்ள 11 விடுதிகளுக்கு 'சீல்' வைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து நடிகர் மிதுன் சக்கர வர்த்திக்கு சொந்தமான 2 விடுதிகளில் 16 கட்டிடங்கள் உட்பட 11 விடுதிகளுக்கு 'சீல்' வைக்கப்பட்டது. 

Follow Us:
Download App:
  • android
  • ios