அவரு ஆடுனா தமிழ்நாடே ஆடுன மாதிரி! அப்பேர்ப்பட்ட மனுஷனை அதார் உதாராக அலையவுட்டு, அவுன்ஸ் அவுன்ஸாக ரன்! பேபி காதலை சிந்த வெச்ச கதை இது...

வாத்தியார் புள்ள மக்காக இருக்கலாம்,  போலீஸ்காரர் புள்ள திருடனா இருக்கலாம் ஆனா அந்த டைரக்டர் புள்ளயான இவரு  அப்படியில்லாம அப்பா பெயரை காப்பாத்தியவர். இன்டஸ்ட்ரிக்கு இவர் வந்த புதுசுல ‘ஏ படமா நடிச்சுட்டு இருக்காரே! எங்க உருப்பட போறார்?’ அப்படின்னு ஊரே கரிச்சு கொட்டுச்சு. அதுக்கு அப்புறம்தான் அவங்க அப்பா சுதரிச்சு, இந்த சினிமா மாணவனோட ரூட்டை கொஞ்சம் மாத்திவுட்டு மாண்புமிகுவாக்கினாரு. 

ரூட்டு மாறினாலும் தம்பிக்குள்ளே நிறைஞ்சு கிடந்த ‘அந்த டேஸ்ட்டு’ மட்டும் மாறவேயில்லை. தான் ஃபீல்டுக்கு வந்த புதுசுல கவர்ச்சியை கொட்டி கை கொடுத்த ஹீரோயின்களோட நட்பை தொடர்ந்துட்டே இருந்தார் தொய்வில்லாம. ஆனானப்பட்ட டைரக்டர்களெல்லாம் இவரோட கால்சீட் கிடைக்காதான்னு காத்திருக்க, இவரோ அந்த பொண்ணுங்க கேட்கிறப்பவெல்லாம்  கால்சீட்டை அள்ளியள்ளி கொடுத்துட்டு இருந்தார். ஆனா அந்த மீட்டிங் எல்லாமே கேமெராவுக்கும், திரைக்கும் பின்னாடிதான் அப்படிங்கிறதுதான் ஹைலைட்டே. 

வருஷத்துக்கு நாலு கிளிங்க அவிடெ தேசமான கேரளாவுல இருந்து  கோலிவுட்டுக்கு வந்து இறங்குறது வாடிக்கை. அப்படித்தான் வந்து சேர்ந்துச்சு அந்த பொண்ணு. ஆளு கோலிக்கா சைஸுல குள்ளமா இருந்தாலும் நடிப்புல படம் காட்டுற பார்ட்டி.  எந்த வதந்திக்கும் வாடாத மனசுக்காரி. குறிப்பா ரொம்ம்ம்ம்ம்பவே பரந்த மனசுக்காரி. மொத்த சினிமாவுலேயும்  வேற ஆளே இல்லாம சிங்கிளா நடிக்க சொன்னாலும் கூட தனியா நின்னு தட்டி எறியுற பர்பார்மென்ஸ் புலிதான் இந்த பொண்ணு. 

சுடச்சுட இட்லிக்கு பொருத்தமா, செம்ம காரமா மொளகா சட்னிய வெச்ச மாதிரி இவங்க ரெண்டு பேரையும் ஜோடியாக்கிவிட்டார் ஒரு இயக்குநர் தம்பி. அங்கே இருந்து ஒரு மார்கமான மெர்சலா ஆரம்பமாச்சு இவங்க சிநேகிதம். படத்துல இன்னும் ரெண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் கூட நம்ம கோலிக்காவுக்குதான் தாறுமாறா ஆக்டிங் கொடுக்கிற கேரக்டர். ஸ்பாட்டுல பின்னி எடுத்துச்சு பொண்ணு. அப்படியே நம்ம மாஸ் ஹீரோவோட மனசையும் கவ்விக்கிச்சு. 

சிச்சுவேசனை சொன்னாலே சிறப்பா நடிச்சு கொடுத்து சீனை தெறிக்க விடுற அந்த பொண்ணோட நடிப்புல விழுந்தாரா அல்லது பம்ப்ப்ப்ளிமாஸ் மாதிரி பரந்து விரிஞ்ச அந்தப் பொண்ணோட கன்னத்து அழகுல விழுந்தாரா அல்லது அதைவிட பெரிதாய் தாரளாமா இருக்கிற இத்யாதிகளில் விழுந்தாரோ தெரியவில்லை. மொத்தத்தில் தலைவன் தாறுமாறாக கிறங்கிவிட்டார். 

நடிக்க சொன்னா எந்த லெவலுக்கும் இறங்கி நடிக்கிற அந்தப் பொண்ணு, இந்த மாதிரி விஷயம்னா மட்டும் ஜிஞ்சர் அடிச்ச மங்கியாட்டமா மூஞ்சை வெச்சுக்கும். ஆனா நம்மாளுக்கோ காரியம் நடந்தே ஆகணும். எம்பூட்டு கஷ்டமான ஸ்டெப்பா இருந்தாலும் கூட மாஸ்டர் ஆடி முடிக்குறதுக்குள்ளேயே பிக்-அப் பண்ணி ஆட துவங்குற மனுஷன் ஆட்டமே வராம தடுமாறுரார். யூனிட்டே தெறிச்சிடுச்சு அதிர்ச்சியில. 

டைரக்டர் தம்பிக்கு விஷயம் புரிஞ்சிடுச்சு. ஆனா அந்தப் பொண்ணுகிட்ட போயி இதைச் சொன்னா தன்னை வேற மாதிரி யோசிக்கும் அப்படிங்கிற பயம் வேற. நைஸா ஓரங்கட்டிட்டார். அன்னைக்குன்னு பார்த்து ரெண்டு சண்டைக்கோழிக்கும் காம்பினேஷன் சீன். அதுவும் ஹீரோயினை இழுத்து ஹீரோ அணைக்குற சீன். சிச்சுவேசனை விளக்குனதுமே பொண்ணுக்கு புரிஞ்சு போச்சு ‘இந்தாளு ஏகப்பட்ட டேக் வாங்குவார். நாம ஒத்துக்காததுக்கு இப்போ பழிவாங்கி, பாதி ஆசையை தீர்த்துக்குவார்’ன்னு மனசுக்குள்ளே புலம்பி கொட்டுச்சு. ஹீரோவும்  கை கால்களை முறுவலிச்சு, வார்ம் அப் பண்ணி, ஒரு முடிவோட ரெடியாகுறார்..

லைட்ஸ் ஆன்! ரோல் கேமெரா! ஆக்‌ஷன்...ன்னு சொன்னதும் சட்டுன்னு ஹீரோயினை இழுத்து அழகா ஒரு அணைப்பு அணைச்சு நடிச்சு முடிச்சுட்டார். டைரக்டருக்கு ஓ.கே. ஆனாலும் ‘சார் வேணும்னா இன்னொரு டேக் போலாமா?’ என்று கேட்க ஹீரோயின் தலையை ஆட்ட, மானிட்டரை பார்த்த ஹீரோவோ ‘வேணாம் இதே போதும். பக்கா’ என்றபடி கேரவேனுக்கு நகர்ந்துட்டார். 

ஹீரோயின் தன் மனசுக்குள்ளே போட்டு வெச்சிருந்த கணக்கெல்லாம் தவிடு பொடியாயிடுச்சு. ‘ச்சே ஆஸம் மனுஷன்ல. டீஸெண்டா நடந்துக்கிட்டாரே!’ என்று லேசாய் புலம்பியபடி நேரே போய் தலைவன் கேரவேன் கதவை தட்டினார். கதவு திறந்தது, பின் மூடிக்கொண்டது. 

ஒரு மணிநேரமாய் காத்திருந்த யூனிட் ஒரு கட்டத்தில் பொறுமையிழந்து ‘பேக் - அப்’ஆனது. மறு நாளில் இருந்து இரண்டு பேருக்குமான ரொமான்ஸ் சீன்களில் கெமிஸ்ட்ரியை பார்க்க வேண்டுமே! அடடா அடடா அட்டடடடா ரகங்கள்தான். 

அந்தப் படத்தில் தன் போர்ஷன் ஷூட்டிங் முடிந்ததும் அந்த பப்ளி பேபி அவிடே பூமிக்கு கிளம்பியது. போகும் போது ஹீரோவை பார்த்து ஏக்க கண்களுடனும், பொங்கும் மனதுடனும் அது சொன்ன ஒரே வார்த்தை... ’ஐ ஆம் வெயிட்டிங்!’