Asianet News TamilAsianet News Tamil

கன் இருந்தா அப்பவே ஷூட் பண்ணி இருப்பேன்... வாழவே தகுதி இல்லை...! ஆதங்கத்தில் பேசிய 'எங்க வீட்டு மாப்பிள்ளை' தேவ சூர்யா'...!

engaveetu mappillai deva surya about asifa murder
engaveetu mappillai deva surya about asifa murder
Author
First Published Apr 25, 2018, 5:03 PM IST


ஆர்யா திருமணத்திற்காக பெண் தேடிய நிகழ்ச்சியில், மொத்தம் 16 பெண்கள் கலந்துக்கொண்டு ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள போட்டி போட்டனர். அவர்களில் ஒருவர் தான் 'தேவ சூர்யா'.

ஸ்பெஷல் எலிமினேட்:

மற்ற போட்டியாளர்கள் அனைவரையும் வரிசையில் நிற்க வைத்து எலிமினேட் செய்யும் ஆர்யா, இவரை தனியாக அழைத்து... டின்னர் கொடுத்து மற்ற போட்டியாளர்களுக்கே தெரியாமல் வழியனுப்பி வைத்தார் என்பது இந்த நிகழ்ச்சியை பார்த்தவர்களுக்கு நன்றாக தெரியும்.engaveetu mappillai deva surya about asifa murder

பேட்டி:

இந்நிலையில் தற்போது ஊடகம் ஒன்றிற்கு 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் பங்கேற்ற அனுபவம் குறித்தும், தன்னுடைய மனதை பாதித்த சம்பவங்கள் குறித்தும் பகிர்ந்து ஆதங்கப்பட்டுள்ளார் தேவ சூர்யா. 

இது தான் உண்மை:

எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி குறித்து பேசிய தேவ சூர்யா, நீங்கள் டிவியில் பார்த்த சம்பவங்கள் தான் உண்மையில் நிகழ்ச்சியில் நடந்தது என்றும். அதை தவிர்த்து எதுவும் நடக்க வில்லை என தெரிவித்தார்.engaveetu mappillai deva surya about asifa murder

மேலும் ஆர்யா, பழகுவதில் மற்றும் பேசுவதில் மிகவும் இனிமையான மனிதர் என்றும், அதன் காரணமாக தான் தன்னால் அவரை சுத்தமாக மறக்க முடியவில்லை என்றும் கூறினார். 

நிகழ்ச்சியின் முடிவு:

இந்த நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத திருப்பத்தோடு முடிந்தது, இப்படிதான் நிகழ்ச்சி முடியும் என ஏற்கனவே உங்களுக்கு தெரியுமா...? என கேள்வி எழுப்ப பட்டதற்கு, "கண்டிப்பாக இல்லை என்றும், அவருடைய முடிவு தங்களுக்கே மிகவும் அதிர்ச்சியாக இருந்ததாக தெரிவித்தார்". 

ஆஷிபா கொலை:engaveetu mappillai deva surya about asifa murder

இதைதொடர்ந்து சமீபத்தில்,  ஜம்மு காஷ்மீரில் சில காமகொடூரர்களால்... பாலியல் வன்புணர்வு செய்து கொல்லப்பட்ட சிறுமி ஆஷ்பா பற்றி தேவ சூர்யா கூறுகையில். இப்படி ஒரு செயலை செய்தவர்கள் வாழவே தகுதி இல்லாதவர்கள் என்றும். அந்த நேரத்தில் தன்னிடம் ஒரு கன் இருந்தால் அவர்களை ஈவு இறக்கம் இன்றி சுட்டு கொலை செய்திருப்பேன் என ஆதங்கத்தோடு தெரிவித்துள்ளார்.

மேலும் யாரென்று தெரியாத ஒருவர் ரோட்டில் அடி பட்டு விழுந்திருந்தால், அவர் எந்த மதம் என நாம் பேதம் பார்க்காமல் உதவி செய்ய ஓடுகிறோம். அது தான் மனிதத்தன்மை. ஆனால் ஆஷிபாவில் வழக்கில் தொடர்புடைய மிருகங்கள் வாழவே தகுதி அற்றவர்கள் என கூறியுள்ளார்.                                                                       

Follow Us:
Download App:
  • android
  • ios