மீண்டும் ஒரு எங்க வீட்டு மாப்பிளை நிகழ்ச்சி! 14 பெண்கள் போட்டிபோடுவது எந்த பிரபலத்திற்கு தெரியுமா? வெளியானது வீடியோ!
பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடிகர் ஆர்யா கலந்து கொண்டு திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சி தான் 'எங்கள்' வீட்டு மாப்பிள்ளை.
பிரபல தனியார் தொலைக்காட்சியில், நடிகர் ஆர்யா கலந்து கொண்டு திருமணத்திற்கு பெண் தேடிய நிகழ்ச்சி தான் 'எங்கள்' வீட்டு மாப்பிள்ளை.
இந்த நிகழ்ச்சியில் ஆர்யாவை திருமணம் செய்து கொள்வதற்காக மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டு விளையாடினர். இவர்களில் வாரம் ஒரு போட்டியாளர் என வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆர்யா இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெரும் பெண்ணை, உண்மையிலேயே திருமணம் செய்து கொள்ள உள்ளதாக அறிவித்தார்.
இதனால் எப்படியும் இந்த வருடம் ஆர்யாவுக்கு திருமணம் நடைபெறும் என எதிர்பார்த்த பலருக்கும் காத்திருந்தது அதிர்ச்சிதான்.நிகழ்ச்சியின் இருந்து நாளில்... தற்போது இருக்கும் மனநிலையில், என்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது என கூறி, எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளாமல் எஸ்கேப் ஆனார்.
தற்போது இதோ போல்... தெலுங்கு தனியார் தொலைக்காட்சியில் தொடங்கப்பட்டுள்ளது. Pelli Choopulu என்று பெயரிடப்பட்டுள்ள நிகழ்ச்சிக்கு 14 பெண்கள் தேர்வாகியுள்ளனர்.
இவர்கள் அனைவரும் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவது பிரபல தொகுப்பாளர் பிரதீப் மசிராஜூஎன்பவரை தான். இவராவது தாற்போது கலந்துகொண்டுள்ள பெண்களில் ஒருவரை திருமணம் செய்து கொள்வாரா என பொறுத்திருந்து பார்ப்போம்.