தெலுங்கானா மாநிலம் ஜாங்கோன் மாவட்டத்தை சேர்ந்தவர் புஸ்ஸா கிருஷ்ணா.  விவசாயியான இவர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் தீவிர பக்தராவார். இதன் விளைவாக தனது வீட்டிலேயே டிரம்புக்கு  6 அடி உயர சிலை அமைத்து, அவரை கடவுளாக கருதி மாலை இட்டு வழிபட்டு வருகிறார்.

சிலையில் நெற்றியில் பொட்டுவைத்து,  மாலை அணிவித்து, அபிஷேகம் ஆராதனை என இவருடைய வீட்டில் தினமும்  பூஜை களைகட்டுகிறது.  ஜெய் டிரம் ஜெய் டிரம் என இவர் பூஜை செய்யும் போது மந்திரமும்  உச்சரிக்கிறார். 

கடந்த 14ஆம் தேதி டிராபின் 73 ஆவது பிறந்த நாளையொட்டி தனது வீட்டு சுவற்றில் டிரம்பின் சுவரொட்டியை, புஸ்ஸா கிருஷ்ணா ஒட்டியதோடு, கிராம மக்களுக்கு விருந்தும் வைத்தாராம்.

 இதுபற்றி புஸ்ஸா கிருஷ்ணா கூறுகையில்... டிரம்ப் ஒரு வலிமையான தலைவர் அவரது துணிச்சலான செயல் பாடு எனக்கு பிடிக்கும் எனவே அவரை வழிபடுகிறேன்.  என்றாவது ஒருநாள் அவரை நான் சந்திப்பேன் என்றார். பிரம்புக்கு சிலை அமைக்க புஸ்ஸா கிருஷ்ணா ரூபாய் ஒரு லட்சத்தை 30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளதாக தெரிவிக்கின்றனர் அவருடைய குடும்பத்தினர். 

 இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக ரீதியிலான மோதல் நடந்து வரும் நிலையில் அமெரிக்க ஜனாதிபதிக்கு இந்தியர் ஒருவர் சிலை வைத்து இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.