கல்கி எழுதிய "பொன்னியின் செல்வன்" வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 


 

இதையும் படிங்க: கடலையே கொந்தளிக்க வைத்த கஸ்தூரி... கடற்கரையில் செம்ம ஹாட்டாக போட்டோ ஷூட் நடத்தி அதகளம்...!

சுமார் 400 கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகிறது. கல்கியின் காவிய படைப்புகளில் வந்திய தேவனாக கார்த்தியும், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவியும், ஆதித்த கரிகாலனாக விக்ரமும் நடித்து வருவதாக கூறப்படுகிறது. 

இந்த படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் விதமாக இந்தி நடிகை சோபிதா துலிபாலா என்பவர் இணைந்துள்ளார். பரதம்  மற்றும் குச்சிபுடியில் தேர்ந்த இளவரசி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். இதையடுத்து ஐஸ்வர்யா ராயுடன் சேர்ந்து சோபிதாவும் தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளார்.

இதையும் படிங்க: "ஒரு ஆணியும்...முடியாது"... விதவிதமாய் போஸ்டர் ஒட்டி...அடுத்த ஐ.டி. ரெய்டுக்கு அலார்ட் செய்யும் விஜய்...!

''பொன்னியின் செல்வன்'' படத்தில் நடிக்கும் அனைவரது கதாபாத்திரமும் அரசல் புறசலாக தெரிந்த நிலையில், உலக அழகிக்கு என்ன கேரக்டர் என ரசிகர்கள் குழம்பி வந்தனர். இந்நிலையில் ''பொன்னியின் செல்வன்'' நாவலின் வில்லி கதாபாத்திரமான நந்தினி கெட்டப்பில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இதையும் படிங்க: தல ஃபேன்ஸ்னா சும்மாவா?... "நேர்கொண்ட பார்வை" பாணியில் பெண்களை பாதுகாக்க களம் இறங்கிய அஜித் ரசிகர்கள்

இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் பால் வடியும் பிஞ்சு முகத்துடன் ஐஸ்வர்யா ராய் வில்லி கேரக்டருக்கு தாங்குவாரா? என பலத்த யோசனையில் உள்ளனர்.