தமிழ் சினிமா பிரபலங்கள் அவர்களது பிள்ளைகளை விளையாட்டு, ஆடல், பாடல் என அனைத்து திரையிலும் ஈடுபாடு கொண்டவர்களாக வளர்க்கிறார்கள். அதே போல் அவர்கள் விரும்புவதை கற்கவும் அனுமதிக்கின்றனர். அந்த வகையில் அவ்வப்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், அஜித், சூரியாவின் பிள்ளைகள் விளையாட்டில் கலக்கும் புகைப்படங்கள் வெளியாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா, டென்னிஸில், கால் பந்து விளையாட்டை தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டிலும் தன்னுடைய கவனத்தை முழுமையாக செலுத்தி வருகிறார்.

ஏற்கனவே ஸ்டேட் லெவல் ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிட்டாலி ராஜ் கைகளால் கோப்பையை வாங்கியுள்ள தியா... தற்போது, கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

மேலும் பலர், தியா சூர்யா - ஜோதிகா இருவரையுமே இவர்களுடைய மகள் மிஞ்சி விடுவாள் என தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.