கொலை, சாதி பழிவாங்கலை மையமாகக் கொண்ட 'வெக்கை' வெற்றிமாறனின் அடுத்த படம் இதுதானா?

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்திலும் தனுஷ் தான் நடிக்க விருக்கின்றாராம். இப்படத்தினை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார்.

director vetrimaran's next film

தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்திவந்த வடசென்னை திரைப்படம் அடுத்த மாதம் வெளிவரவிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பினை சில மாதங்களுக்கு முன்பாகவே இயக்குனர் வெற்றி மாறன் முடித்துவிட்டார். சமீபத்தில் கூட இப்படத்தின் கதாபாத்திர அறிமுக வீடியோ நல்ல வரவேற்ப்பினை பெற்றது.

இந்நிலையில், இயக்குனர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த திரைப்படத்திலும் தனுஷ் தான் நடிக்க விருக்கின்றாராம். இப்படத்தினை ‘வி கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் கலைப்புலி.எஸ்.தாணு தயாரிக்கவிருக்கிறார். ஏற்கெனவே, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தையும் இதே நிறுவனம் தான் தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் ஷூட்டிங்கை வருகிற அக்டோபர் மாதம் துவங்கவுள்ளனர். படப்பிடிப்பை தென் மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இப்படம் எழுத்தாளர் பூமணி அவர்கள் எழுதிய 'வெக்கை' என்ற நாவலை தழுவி எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நாவல் பழிவாங்குதலை மையமாக கொண்டது. ஏற்கனவே சந்திர குமார் எழுதிய லாக்கப் நாவலை தழுவி வெற்றிமாறன் எடுத்த 'விசாரணை' மிகப்பெரிய வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தனுஷின் ‘பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை’ ஆகிய 3 படங்களையும் வெற்றிமாறன் இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios