கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பரபரப்பைக் கிளப்பிய சுசி கணேசன் லீனா மணிமேகலை தொடர்பான ‘மி டு’விவகாரம் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அடுத்த பட வேலைகள் எதுவும் கைவசம் இல்லாததாலோ என்னவோ, எழுத்தாளர் லீனா மணிமேகலை மீது சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்திருக்கிறார் சுசி கணேசன்.

கடந்த அக்டோபர் மாதம் தனது முகநூல் பதிவில் இயக்குநர் சுசி கணேசன் தொடர்பாக தொடர்ந்து பதிவுகள் வெளியிட்ட லீனா மணிமேகலை அவர் தன்னை காரில் டிராப் செய்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், தன்னிடம் கத்தி இருந்ததால் அதைக்காட்டி மிரட்டி அவரிடமிருந்து தப்பித்ததாகவும் பதிவிட்டிருந்தார். இதை அடுத்து தன் தரப்பு விளக்கத்தை அளித்த சுசி கணேசன் ‘லீனா முழுக்க பொய்சொல்கிறார். அத்தனையும் விளம்பரத்துக்காகவே செய்கிறார்’என்று மறுத்தார்.

ஆனால் அடுத்த ஓரிரு நாட்களில் சுசியின் ‘திருட்டுப்பயலே 2’படத்தில் நடித்த நடிகை அமலாபால் லீனாவை ஆதரித்ததோடு சுசிகணேசன் தன்னிடமும் தவறாக நடக்க முயன்ற சம்பவங்களை மீடியாக்களிடம் பகிர்ந்தார்.

இந்நிலையில் சரியாக  எட்டு மாதங்கள் கழித்து ஆக்‌ஷனில் இறங்கியுள்ள சுசி கணேசன் சைதாப்பேட்டை மெட்ரோபாலிடன் கோர்ட்டில் இபிகோ 200 [கிரிமினல்] இபிகோ 500 அவதூறு செய்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குத் தொடர்ந்துள்ளார். சுசியின் இந்த வழக்கு குறித்து கமெண்ட் அடித்துள்ள பிரபல மனநல மருத்துவர் ஷாலினி,...இப்ப இதை இவரே ஏன் திரும்ப கிளறுகிறாரூ?
இது என்ன “மனைவியை திருப்திப்படுத்துவோர் வாரமா?! என்று கிண்டலடித்துள்ளார். மனைவியை திருப்திப்படுத்துவோர் பட்டியலில் முதல் இடம் பிடித்திருப்பவர் ஆசான் ஜெயமோகன் என்பதை நினைவில் கொள்க.