விஜய்யின் 64 படத்தை கைதி பட புகழ் லோகேஷ் கனராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள அந்த படத்தில் தளபதி விஜய் மருத்துவக்கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் மற்றும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இந்த படத்தின் கிளைமேக்ஸ் சண்டைகள் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. சுரங்கத்தில் படமாக்கப்பட்டன. சம்மர் ஸ்பெஷலாக படத்தை திரையிட திட்டமிட்டுள்ளதால், படக்குழுவினர் தீயாய் வேலை செய்து வருகின்றனர். 

இதனிடையே விஜய்யின் 65வது படத்தை யார் இயக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வெற்றிமாறன், அட்லி, அருண் காமராஜ், பேரரசு என விஜய்யின் 65 படத்தை இவர் இயக்கப்போறார், அவர் இயக்கப்போறார் என மிகப்பெரிய பட்டியல் சோசியல் மீடியாவில் வைரலாகிறது. தற்போது கடைசியாக அந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ளது, நம்ம பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர்.

இதுகுறித்து விருது விழா ஒன்றில் ஷங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷங்கர், தளபதி 65 படத்தை இயக்க நானும், நடிக்க விஜய்யும் ரெடி... எப்ப வேணாலும் அது நடக்கலாம் என மனம் திறந்துள்ளார். இந்த தகவலை கேள்விப்பட்ட நேரத்தில் இருந்தே விஜய் ரசிகர்கள் மரண வெயிட்டிங்ண்ணா...!