விஜய் ரத்னகர் கட்டே இதுவரை எமோஷனல் அட்டாய்க்கர், டைம் பாரா வைத் , பத்மஷியான் போன்ற படங்களை தயாரித்துள்ளார். தற்பொழுது "தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்ட்டர்' என்ற படத்தினை இயக்கி வருகிறார். இப்படம் முன்னாள் பிரதமர்  மன்மோகன் சிங் அவர்களின் மீடியா அட்வைஸராக இருந்த சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டு வருகின்றது. 

இப்படத்தில் அனுபம் கர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்காகவும், அக்சே கண்ணா  பாருவாகவும், திவ்யா சேத் ஷா முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுராகவும் நடித்துவருகின்றனர்.  

இந்நிலையில் இப்படத்தின் இயக்குனர் மீது போலி ஆவணங்களை காட்டி 34 கோடி வரியேய்ப்பு செய்ததாகக் கூறி சரக்குகள் மற்றும் சேவை வரித்துறை இயக்குநரகம் (Directorate General of Goods and Services Tax Intelligence) கைது செய்துள்ளது. 

விஜய் ரத்னகர் கட்டே மீது 132 (1)(c) ஜீஎஸ்டி ஆக்ட் என்றப்  பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.