மிஷ்கின் இயக்கத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளைஞராக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள "சைக்கோ" திரைப்படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று ரிலீஸ் ஆகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. நித்யா மேனன், அதிதி ராவ், சிங்கம் புலி உள்ளிட்ட பலரும் நடித்திருத்த சைக்கோ படம் தியேட்டர்களில் மரண பீதியில் சீட் நுனியில் உட்கார வைத்தது. 

இதிகாசத்தில் கூறப்படும் அங்குலிமாலா, புத்தர் கதையை தற்போதை இன்டர்நெட் தலைமுறைக்கு ஏற்ற மாதிரி, சூப்பராக மாற்றியிருந்தார் மிஷ்கின். டெக்னீக்கல் ரீதியாக மாஸ் காட்டிய படம், கதை ரீதியாக சில இடங்களில் சொதப்பியிருப்பதாகவும் ரசிகர்கள் விமர்சித்தனர். 

அதிலும் சைக்கோ கொலைக்காரன் உடைகள் ஏதுமின்றி பின்புறம் திரும்பி நிற்பது போன்ற காட்சிகள் அடிக்கடி காட்டப்படும். அந்த காட்சிகள் டீசரில் இடம் பெற்றதோ கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. படத்திற்கு தேவையே இல்லாமல், இந்த மாதிரி காட்சிகளை மிஷ்கின் பயன்படுத்தியிருக்கிறார்  என ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்தனர்.

இந்நிலையில் சோசியல் மீடியாவில் நெட்டிசன்களால் அதிகம் கமெண்ட் செய்யப்பட்ட சைக்கோ பட காட்சி குறித்து பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் மிஷ்கின். இதுகுறித்து பேசியுள்ள அவர், சைக்கோ மனிதனின் மனதில் நிறைய கந்தல் துணிகள் இருந்தது, குப்பை போல... அதை அவனால் வெளியில் எடுத்து வீச முடியாததால். தனது உடலில் உள்ள உடைகளையாவது எடுத்து வீச வேண்டும் என்பதால், நிர்வாணமாக நிற்பதாக பதிலளித்துள்ளார்.