தென்னிந்திய திரைப்பட உலகில் மட்டும் இன்றி, ஹாலிவுட் திரையுலகிலும் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகி வருகின்றனர். இதனை அவர்களே சில சமயம் தாங்கள் கொடுக்கும் பேட்டியில் வெளிப்படையாக கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த பிரபல நடிகையும், பாடகியுமான ஜெனிபர் லோபஸ்சை இயக்குனர் ஒருவர் மேலாடைய கழட்ட சொல்லி. பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியுள்ளார். இந்த தகவல் ஹாலிவுட் ரசிகர்கள் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் அந்த இயக்குனரின் பெயரை வெளியிடாத இவர்... இயக்குனர் இப்படி சொன்னபோது முடியாது என கூறி அந்த இடத்தில் இருந்து உடனடியாக கிளம்பியதாகவும், அப்போது தன்னுடைய இதயம்  மிகவும் அதிகமாக துடித்ததாகவும் அண்மையில் இவர் கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார் ஜெனிபர் லோபஸ்.