அறிமுகப்  படமான 'சதுரங்க வேட்டை' திரைப்படத்தின் மூலம் திரைத்துறையையே திரும்பி பார்க்கவைத்தவர் இயக்குனர் எச்.வினோத். அந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படம் வணிக ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 

மேலும் வரலாற்றின் இருண்ட பக்கங்களின் பதிவாக்கிய திரைப்படமாகவும் இது பார்க்கப்பட்டது. அந்த அளவிற்கு 'தீரன் அதிகாரம் ஒன்று' திரைப்படத்திற்க்காக பல ஆய்வுகளை மேற்கொண்டிருந்தார் எச். வினோத். அவருடைய அடுத்த திரைப்படத்திற்கு எந்த நடிகருடன் கூட்டணி அமைப்பார்  என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவிவந்தது.

அந்த பட்டியலில் நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோரும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்பொழுது இயக்குனர் எச்.வினோத் நடிகர் சியான் விக்ரமிற்கு ஒரு கதையைக் கூறியுள்ளாராம். நடிகர் விக்ரமுக்கு அந்த கதை மிகவும் பிடித்துவிட்டதாகவும், இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் துவங்க வாய்ப்பிருப்பதாக   தகவல்கள் வெளியாகியுள்ளது.