நடிகர் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகர், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார் கூறியிருந்தார். இது குறித்து அவர் பேசும்போது, தனது நேர்மையும் உண்மையும் எனக்கு தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

காலா படத்தில் வில்லனாக நடித்தவர் பிரபல நடிகர் நானா படேகர். சிறந்த நடிப்புக்காக தேசிய விரும், பிலிம்பேர் விருதும் பெற்றவர். 

இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

தனுஸ்ரீ தத்தா, தமிழில் 'தீராத விளையாட்டு பிள்ளை' படத்திலும் இந்தி படத்திலும் நடித்தவர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹான் ஓகே ப்ளீஸ் என்ற இந்தி படத்தில் நடித்தபோது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து தன்னை நானா படேகர் அடித்ததாகவும், இந்த விவகாரம் பற்றி தெரிந்திருந்தும் எந்தவொரு நடிகரும் அவரை கண்டிக்கவோ, தனக்கு ஆதரவாக குரல் கொடுக்கவோ இல்லை என்று நேற்று கூறியிருந்தார்.

தனுஸ்ரீ தத்தா, செய்தியாளர்களிடம் பேசும்போது, நானா படேகர் படப்பிடிப்பு தளத்தில் வைத்து ஆக்ரோஷமாக பிடித்து தள்ளி மிகவும் தவறாக நடந்து கொள்வார். இது குறித்து புகார் தெரிவித்தபோது யாரும் கண்டு கொள்ளவில்லை. ஜோடி நடனமாக இருந்தாலும், தனியாக ஆடும் நடனமாக இருந்தாலும் அவர் நடந்து கொண்டது, கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி, கடும் தொல்லைகளுக்கு ஆளானதை உணர்ந்தேன். இது குறித்து புகார் தெரிவித்தும் பயனில்லை இருந்தாலும், அதில் இருந்து நான் தப்பினேன்.

மனிதநேயமிக்க ஒவ்வொருவரும் என்னை காயப்படுத்தும் விதமாக பேசுகின்றனர். அவரை பழம்பெரும் நடிகர், மூத்த நடிகர், விருது பெற்ற நடிகர் என்றும் கூறுகின்றனர். ஆனால் என்னைப் பற்றிக் கூறும்போது, இவர் என்ன விருது வாங்கியிருக்கிறார் என்று கேள்வி எழுப்புகின்றனர்.

என்னை ஆபாச நடிகை, கவர்ச்சி நடிகை, முத்தக்காட்சிகளில் நடித்த நடிகை, ஆசிக் பனாய அப்னே நடிகை என்றும் சொல்கிறார்கள். 

நீங்கள் நீதிபதி கிடையாது. என்னுடைய நடத்தையை தீர்மானிக்க... என்னுடைய நேர்மை, என்னுடைய உண்மை எனக்குத் தெரியும். என்னுடைய படத்தை வைத்தோ, நான் நடித்த படங்களை வைத்தோ என்னைத் தீர்மானிக்க வேண்டாம். படங்களில் இயக்குநர் தரும் வேடங்களில் நடிக்கிறேன். சமூக சேவையில் ஈடுபட்டு வரும் நானா படேகரை, பலரும் பாராட்டி வரும் நிலையில், நடிகை தனுஸ்ரீ தத்தாவின் இந்த குற்றச்சாட்டுக்கு அவர் என்ன கூறப்போகிறாரோ தெரியவில்லை...!