Asianet News TamilAsianet News Tamil

7 மணி நேர படமான... நாட்டையே உலுக்கிய மருத்துவக் கல்லூரி மாணவி கற்பழிப்பு...

2012ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு லேசில் மறந்துவிடமுடியாது. அச்சம்பவம் தற்போது ‘டெல்லி க்ரைம்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.

delhi bus rape case as web series
Author
Delhi, First Published Jan 31, 2019, 10:13 AM IST

2012ம் ஆண்டு மருத்துவக்கல்லூரி மாணவி ஒருவர் ஓடும் பஸ்ஸில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தை யாரும் அவ்வளவு லேசில் மறந்துவிடமுடியாது. அச்சம்பவம் தற்போது ‘டெல்லி க்ரைம்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.delhi bus rape case as web series

சம்பவம் நடந்த வருடத்தில் நாட்டையே பரபரப்பாக்கிய இந்த வழக்கில் போலீசார் குற்றவாளிகளைக் கண்டறிந்து சிறையில் அடைத்தனர். அவர்களில் 17 வயது சிறுவன் ஒருவனும் அடக்கம். அடுத்த சில ஆண்டுகளில் அவன் வயதை காரணம் காட்டி விடுதலை செய்யப்பட்டான். அவனது விடுதலை பெரும் சர்ச்சையாகி நாடெங்கும் விவாதிக்கப்பட்டது.

தற்போது அந்த மருத்துவ மாணவி வழக்கை தழுவி 7 மணிநேரம் ஓடக்கூடிய அளவில் ’டெல்லி கிரைம்’ என்ற பெயரில் படம் உருவாகியுள்ளது. ’ஷிபாலி ஷா’, ’லைப் ஆப்  பை’படத்தில் நடித்த அடில் ஹுசைன், டென்சில் ஸ்மித், ராஷிகா டுகல், ராஜேஷ் தைலங், யாஷாஸ்வினி டயானா ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.delhi bus rape case as web series

சன் டேன்ஸ் திரைப்பட விழாவில் நேற்று திரையிடப்பட்ட ‘டில்லி கிரைம்’ தொடர் இந்திய கனடா இயக்குநர் ரிச்சி மேத்தாவால் இயக்கப்பட்டது. ஏழு பகுதிகளாக உருவாகியுள்ள இந்தத் தொடர் மார்ச் 22-ந் தேதி முதல் நெட் பிளிக்ஸ் இணையதளத்தில் ஒளிபரப்பாக உள்ளது.

படம் குறித்து இயக்குநர் ரிச்சி மேத்தா வெளியிட்டுள்ள அறிக்கையில், “டெல்லி கிரைம் படத்தை இயக்கியது தனிப்பட்ட முறையில் என்னை உருமாற்றிய பயணம். சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரையும் சந்தித்து பேசியது, போலீசார் விசாரித்த பாதையில் மறுதேடல் செய்தது.பல்வேறு வரம்புகள் இருந்தபோதும் வழக்கை முடிக்க உறுதியுடன் அவர்கள் செயலாற்றியது என முக்கியமான பயணமாக அமைந்தது. எனது இப்படம் டெல்லி கற்பழிப்பு குறித்த, மக்கள் மறந்துபோன அந்த உரையாடலைத் தொடர உதவினால் போதும்.மிகவும் மகிழ்ச்சி அடைவேன்’ என்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios