பேய் எல்லாம் பாவம்' படத்தை இயக்கிய இயக்குனர் தீபக் நாராயணன் அந்த படத்தில் அறிமுகமாகியுள்ள கேரள நடிகை டோனா சங்கர் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளததை டோனா நேற்று பட விழா மேடையில் கூறி அனைவரையும் அதிர்ச்சியாக்கினார்.

கேரளாவை சேர்ந்த கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள தமிழ் திரைப்படம் 'பேய் எல்லாம் பாவம்'. இந்த படத்தில் நடித்துள்ள ஹீரோ அரசு மற்றும் காமெடியன் அப்பு குட்டியை தவிர மற்ற அனைத்து கலைஞர்களும் மலையாள திரையுலகை சேர்ந்தவர்கள் தான்.

இயக்குனர் தீபக் நாராயணன் இயக்க, பிரசாந்த் ஒளிப்பதிவு செய்கிறார். நவீன் சங்கர் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது பேசிய நடிகை டோனா சங்கர், இயக்குனரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ள தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த திரைப்படம் ஆரம்பமாகும் போதே, இயக்குனர் தீபன் நாராயணன் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். பின் படப்பிடிப்பின் போது அது காதலாக மாறியது. பின் தயாரிப்பாளருக்கு படத்தை முடித்து கொடுத்த பின்னர் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி இருவரும் படம் முடிந்த கையேடு திருமணம் செய்து கொண்டுள்ளதாக கூறிய இவர். இந்த இசை வெளியீட்டு விழாவில் இருவரும் தற்போது கணவன் மனைவியாக கலந்து கொண்டுள்ளதாக உண்மையை போட்டுடைத்தார் இதனை சற்றும் எதிர்ப்பாராத பலருக்கு செம ஷாக்.