சின்னத்திரை நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாக தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் தொகுப்பாளர் டிடி. 

பல முன்னணி நடிகர்களுக்கும் இவர்தான் ஃபேவரட் ஆங்கர்.  இவருடைய திருமண வாழ்க்கை விவாகரத்தில் முடிந்தாலும், மனதில் உள்ள கவலைகளை சற்றும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் எப்போதும் தன்னை மகிழ்ச்சியாகவே காட்டிக்கொள்கிறார்.

மேலும் தற்போது, தொகுப்பாளர் என்பதை தாண்டி பேஷன் ஷோ, திரைப்படங்கள் நடிப்பதிலும் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக ப.பாண்டி திரைப்படம் வெளியாகியது. இதை தொடர்ந்து, விரையில் துருவ நட்சத்திரம் திரைப்படம் வெளியாக உள்ளது. 

இந்நிலையில் தற்போது டிடி, அவருடைய ட்விட்டர் பக்கத்தில்... சிறுவயதில் அவர் சைக்கிள் ஓட்டும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை, வெளியிட்டு... தற்போது அதே போல் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிட்டுள்ளார். 

டிடியின் ரசிகர்கள், இந்த புகைப்படத்தை அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள். பலர் மிகவும் கியூட்டாக இருப்பதாக தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.