பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் எலிமினேட் ஆன டேனி அவரது காதலியை இன்று கரம்பிடித்திருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் எல்லோரின் குடும்பத்தினரும் வந்து போட்டியாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

அப்போது டேனியின் அம்மாவும், அவரின் காதலியும் பிக் பாஸ் வீட்டிற்கு டேனியை காண வருகை தந்திருந்தனர். அப்போது கூட டேனியின் காதலி தான் இருப்பது பிக் பாஸ் வீட்டில் அதுவும் மாமியார் முன்னிலையில் என்பதை மறந்து டேனிக்கு முத்த மழை பொழிந்தார்.

இதனை கமலஹாசன் கூட “இந்த பிக் பாஸ் வீட்டில் மருத்துவ முத்தம் பற்றி கேள்வி பட்டிருக்கேன். ஆனா இது எனா முத்த மாருதமா?” என்று கேலி செய்திருந்தார். இந்த முத்த மாருதத்தினை பார்த்த டேனியின் அம்மா மட்டுமல்ல , பிக் பாஸ் ரசிகர்களும் கூட கொஞ்சம் தர்ம சங்கடமான சூழலுக்கு ஆளாக தான் செய்தனர். 

இதனிடையே நேற்றைய பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கிறார் டேனி. ஐஸ்வர்யா மற்றும் யாஷிகாவுடன் சேர்ந்து இவர் செய்த சில விஷ்மங்கள் தான் இவர் வெளியேற காரணம் என்று மீம்ஸ் ஒரு புறம் வந்திருந்தன,இதனால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய இவர் தன் செயல்களுக்காக மன்னிப்பு கேட்டு ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில் தான் தன்னுடைய காதலியான டெனிஷாவை பதிவு திருமணம் செய்து கொண்டிருப்பதை அறிவித்திருக்கிறார். குடும்ப சூழல் காரணமாக அவசரமாக இந்த திருமணத்தை செய்ய வேண்டிய சூழல் தனக்கு ஏற்பட்ட தாக குறிப்பிட்டிருக்கும் அவர், தங்களை அனைவரும் ஆசிர்வதிக்கும் படி கேட்டிருக்கிறார். 

இதில் அவர் குடும்ப சூழ்நிலை என குறிப்பிட்டு கூறி இருப்பது, பதிவு திருமணத்தின் போது டேனியின் அம்மா உடன் இல்லாமல் இருப்பது , இதை எல்லாம் வைத்து பார்க்கும் போது ஒருவேளை பிக் பாஸ் வீட்டில் வைத்து நடந்த விஷயங்கள் தான், இந்த அவசர சூழல் உருவாக காரணமாக இருக்குமோ? என்ற கேள்வியை பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது.