இந்தியாவில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து கொண்டே சென்றாலும், மத்திய, மாநில அரசுகளின் துரித முயற்சி, மற்றும் மருத்துவர்களின், அர்ப்பணிப்பு போன்றவற்றால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்கள் அதில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் பட தயாரிப்பாளர், கரீம் மொரானியின் மகள் ஷாஜியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருத்துவர்கள் அவரை தனிமை படுத்தி தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

கரீம் மொரானி,  நடிகர் ஷாருக்கான் நடித்த ’சென்னை எக்ஸ்பிரஸ்’ ’தில்வாலே’ ’ஹாப்பி நியூ இயர்’ ’ரா ஒன்’ உள்பட பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளவர்.

இவருடைய மகள், சமீபத்தில் தான் ஆஸ்திரேலியாவில் இருந்து மும்பை வந்ததாக தெரிகிறது. இதை தொடர்ந்து இவருக்கு கொரோனா குறித்து எந்த அறிகுறியும் இல்லாமல் வீட்டில் சாதாரணமாக இருந்துள்ளார். திடீர் என காச்சல் மற்றும் மூச்சு திணறல், தலை வலி வந்ததால், உடனைடியாக மும்பையில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் இவரை குடும்பத்தினர் அனுமதித்துள்ளனர்.

இவருக்கு கொரோனா அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து, மருத்துவர்கள் டெஸ்ட் எடுத்து பார்த்ததில், ஷாஜியாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே அவரை தனிமை படுத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். 

மேலும், இவருடன் வீட்டில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் 9 போரையும் தனிமை படுத்தி, அவர்களையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.  இந்த செய்தி பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.