பேட்ட படத்தில் பழைய அதே  ஸ்டைலிஷான ரஜினியை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள். இந்த படத்தில் பாட்ஷா ஸ்டைலில் ஹாஸ்டல் வார்டனாக வலம்வரும் ரஜினிகாந்த்,  ஃப்ளாஷ்பேக் ஸீனில் முறுக்கு மீசையுடன் செம்ம கெத்தாக வரும் ரஜினி சசிகுமாருடன் இணைந்து வருகிறார். 

அதில் ஒரு காட்சியில் ஆற்று மணல் எடுப்பவர்களைக் கண்டிக்கும் ரஜினி, அவர்களை பார்த்து ‘நாதாரிங்களா’ திட்டுகிறார்.  அதேபோல மீண்டும் ஓர் இடத்தில் நாதாரிங்களா என சொல்லி ரஜினி திட்டுகிறார்,  அதேபோல, ‘ஓட்டுக் கேட்டியாடா நாதாரி’ என மீண்டும் ஒருமுறை அதே வார்த்தையைச் சொல்லித் திட்டுகிறார் ரஜினி.  இதை காட்சியில் பலத்த கரகோஷம் விசில் சத்தம் எழுகிறது.

ரஜினி சொல்லும் இந்த  நாதாரி’ என்ற வார்த்தை பன்றி மேய்க்கும் போயர் சமூக மக்களைக் குறிக்கும் ஒரு சொல்லாம். ஆனால், படத்திலோ அது  கெட்டவர்களை திட்டுவதற்கு  பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், அந்த வசனத்தை இதுவரை யாரும் கேட்கவில்லை என ஒரு சாரார் குற்றம் சாட்டி வருகின்றனர்.

‘வீழ்வேனென்று நினைத்தாயோ’ என்று பாரதியார் வரியை  ‘பஞ்ச்’ வசனம் பேசி ‘பேட்ட’யில் மாஸ் என்ட்ரி கொடுக்கிறார் ரஜினி, அதே பாரதியார் சொன்ன ‘சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’  என சொன்னதை மறந்தது ரஜினிக்கு கார்த்திக் சுப்புராஜ் மறைத்தது ஏன் எனத் தெரியவில்லை. அவருக்கு அப்படியான வார்த்தை வேறு சமுதாயத்தை குறிப்பது என தெரியவில்லையா?

படத்தில் இடம் பெற்ற அந்த வசனம்  வரும் கதைக்களம் மதுரையில் நடப்பது. அந்தக் காட்சிகளில் ரஜினியுடன் இணைந்து நடித்துள்ள இயக்குனரான சசிகுமார் சொந்த ஊர் மதுரை. பேட்ட படத்தின்  இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஊரும் மதுரை என்றே அறியப்படுகிறது. இப்படியிருக்க அதே மதுரைப் பகுதியையொட்டிய பன்றி மேய்க்கும் மக்களுக்குத்தான் குறிப்பிட்ட அந்தப் பெயர் இருப்பது தெரியாமல் போனது தான் கொடுமை.