ஜோதிகாவின் படத்திற்கு பாடல் எழுதும் போட்டி! திறமையை நிரூபிக்க ஒரு வாய்ப்பு!
பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காற்றின் மொழி" இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.
பாப்டா மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் , விக்ரம் குமார் , லலிதா தனஞ்ஜெயன் தயாரிப்பில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "காற்றின் மொழி" இப்படத்தை ராதாமோகன் இயக்கியுள்ளார்.
தும்ஹாரி சுலு' என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்தான் இந்த 'காற்றின் மொழி' திரைப்படம். ஹிந்தியில் தேசிய விருது பெற்ற வித்யாபாலன் நாயகியாக நடித்திருந்தார். ஜோதிகா நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'மொழி' திரைப்படத்தின் இயக்குநரான ராதா மோகன் தமிழுக்கு ஏற்றார் போல் இப்படத்தை அழகாக இயக்கியுள்ளார்.
ரொமான்டிக் காமெடியாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா, விதார்த், லட்சுமி மஞ்சு, மனோபாலா, குமரவேல், உமா பத்மநாபன் மற்றும் மோகன் ராமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி படத்தின் படக்குழு விநாயகர் சதூர்தியை முன்னிட்டு "காற்றின் மொழி பாடல் எழுதும் போட்டியை" அறிவித்துள்ளது. பாடல் எழுத தெரிந்தவர்கள் , சினிமாவில் பாடல் எழுதுவதை கனவாக கொண்டவர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய திறமையை வெளிக்காண்பிக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
சிறந்த பாடல்கள் இரண்டை கவிஞர் மதன் கார்க்கி தேர்ந்தெடுப்பார். தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு பாடல்களும் மக்கள் முன்னால் பாடப்பட்டு எழுதியவர்களுக்கு அங்கீகாரம் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்குபெற கடைசி தேதி 22.09.18 ( சனிக்கிழமை ) என அறிவிக்கப்பட்டுள்ளது
போட்டியில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள் விதிமுறைகளை படித்துவிட்டு பாடல் எழுதும் போட்டியில் பங்குபெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
போட்டியின் நிபந்தனைகள் இதோ: