கோவை அந்தணர் முற்னேற்ற கழகம் சார்பில், பிராமணர்களை பற்றி அவதூறான கருத்தை வெளிபடுத்திய ஜி- 5 தொலைக்காட்சி உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.  

ஜீ5 ஓடிடியில் பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் காட்மேன் என்ற வெப் சிரீஸ் வெளியாக உள்ளது. டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த நிலையில் இந்த இணைய தொடரின் டீசரில் பிராமண சமூகத்தை கொச்சைப்படுத்தும் விதமாகவும், இந்து மதத்தை தவறாக சித்தரிக்க முயலும் ரீதியிலும் உள்ளதாக சமூக வலைதளங்களில் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

டீசர் தொடங்கும் போதே "பிராமணாள் மட்டும் தான் வேதம் படிக்கணும்னு எந்த சாஸ்திரத்துல சொல்லி இருக்கு" என்று தொடங்கும் இந்த டீசர், காவி உடையில் சாமியாராக வரும் ஜெயபிரகாஷ் "என்ன சுத்தி இருக்குற எல்லா பிராமணர்களும் அயோக்கியனுங்களா இருக்காணுங்க". என்ற வசனம் அனல் தெறிக்கிறது. மேலும், ஜெயபிரகாஷ் மகனாக நடித்துள்ள டேனியல் பாலாஜியிடம் "நீ வேதம் படிக்கணும் அய்யனார்" இந்த ஒரு வசனம், "இந்த உலகத்துக்கு ஒரு பிராமணன் எப்படி இருக்கனும்னு காட்ட போறேன்" என தனது மகனை ஒரு சிறந்த பிராமணனாக உருவாக்க முயற்சியெடுப்பர்.

 இன்னொரு பக்கம் புட்டி ஆனால் டேனியல் பாலாஜியோ ஒரு பக்கம் குட்டி இன்னொரு பக்கம் புட்டி என உலகத்தில் உள்ள எல்லா தவறான செயல்களையும் செய்து கொண்டிருக்கும் ஒருவராக இருக்கிறார். டீசரின் முடிவில் டேனியல் பாலாஜி மற்றும் அவரது நண்பர் இருவரும் மது அருந்தும் போது "நீ பிராமணன் ஆக போறியா" என நக்கலாக சிரிக்கிறார் அவரது நண்பர். இப்படி அனல் பறக்கும் வசனங்களுடன் வெளியான இந்த வெப் தொடர் வருகிற ஜூன் 12ம் தேதி ஜீ5-ல் வெளியிடப்பட உள்ளது. இதற்கு பல்வேறு தரப்பிலும் இருந்து நடவடிக்கை எடுக்கக்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டு வருகிறது.