தி.மு.க. தலைவர் கருணாநிதி 6வது நாளாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார். 

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கருணாநிதி உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, திடீரென தொண்டர்கள் கலங்கிபோயினர். இந்தநிலையில் டாக்டர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் பலனாக கருணாநிதி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

தற்போது ஒவ்வொரு நாளும் கருணாநிதியின் உடல் நலம் குறித்து விசாரிக்க பல்வேறு அரசியல் வாதிகள் மட்டும் தமிழ் சினிமா பிரபலங்கள் வந்து திமுக தலைவர் கருணாநிதி உடல் நலம் குறித்து நலம் விசாரித்து செல்கினறனர். அந்த வகையில் இதுவரை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு, ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ்அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கேரள முதலமைச்சர் பினராயு விஜயன்,  கமல், ரஜினிகாந்த், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், உள்ளிட்ட பலர் நேரடியாக காவேரி மருத்துவ மனைக்கு வந்து நலம் விசாரித்து சென்றனர்.

இந்நிலையில் பல தமிழ் திரைப்படங்களில், சிறு காமெடி ரோல்களில் நடித்து பிரபலமான, நடிகர்கள் 'கிங் காங்', 'முத்து காளை', 'போண்டா மணி' உள்ளிட்டோர் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க காவேரி மருத்துவ மனைக்கு வந்து, கலைஞர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து திமுக செயல் தலைவர் ஸ்டாலினிடம் விசாரித்தனர். 

பின் செய்தியாளர்களிடம் பேசிய இவர்கள், தற்போது கலைஞர் கருணாநிதி நலமுடன் உள்ளதாகவும், தாங்கள் கருணாநிதியின் கைகளால் எழுதப்பட்ட பராசக்தி படத்தின் வசனத்தை பேசி தான் நடிக்க வந்தோம். அவர் பூரண உடல் நலம் பெற்று அடுக்கு மொழியில் தமிழ் பேச வேண்டும் என தெரிவித்தனர்.