உலகையே ஒட்டுமொத்தமாக உலுக்கி எடுத்திருக்கும் கொரோனா வைரஸ் நோய் இந்தியாவிலும் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. இதுவரையிலும் 271 பேர் இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் நிலையில்  பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரபடுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு எச்சரித்திள்ளது. பள்ளி, கல்லூரி, திரையரங்குகள் மற்றும் பொது மக்கள் கூடும் முக்கிய இடங்கள் அனைத்தும் முடப்பட்டுள்ளன.  நாளை தேசிய சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அன்றைய தினம் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

பிரதமர் மோடி அவர்களின் மக்கள் ஊரடங்கிற்கு திரைப்பிரபலங்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அதேபோன்று பொதுமக்களும் ஆதரவளிக்க வேண்டுமென விழிப்புணர்வு வீடியோக்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து இன்று கவிஞர் வைரமுத்துவும் தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். 

இதையும் படிங்க: ஆபாச வெப்சைட்டில் நிர்வாண போட்டோஸ்... கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மீரா மிதுன் செய்த காரியம்...!

அதில், “நம்மைக் காத்தல்; நாடு காத்தல். இரு அறைகூவல் எதிரே. தனிமைப்படுவோம் நம்மைக் காக்க; பின் ஒன்று படுவோம் நாடு காக்க”. என்று பதிவிட்டுள்ளார்.