தமிழக அரசு தியேட்டர்களில் விற்பனை செய்யப்படும் உணவு பொருட்கள், எம்.ஆர்.பி விலையைவிட அதிக விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

திரையரங்குகளில் விற்கப்படும் உணவு பொருட்கள் எம்.ஆர்.பி. விலைக்கு அதிகமாக விற்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில், 335 திரையரங்குகளில் தொழிலாலளர் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது, எம்.ஆர்.பி. விலைக்கு அதிகமாக உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.

இதனை அடுத்து, 782 கேண்டீன் உரிமையாளர்கள் மற்றும் 38 தியேட்டர் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

திரையரங்குகளுக்கு உணவு பொருட்களை தயாரித்து அளிக்கும் 4 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

தொழிலாளர் நலத்துறையால் அறிமுகப்படுத்தப்பட்ட TN-LMCTS என்ற செயலி வாயிலாக நுகர்வோர் புகார் அளிக்கலாம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.