இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழ்திரையுலகில் முன்னணியில் இருக்கும் இயக்குனர்களில் ஒருவர். வித்தியாசமான அதே சமயம் சமுதாயக்கருத்துக்கள் அடங்கிய படங்களை எடுப்பது இவரது பாணி. கஜினி படத்தின் வெற்றியை தொடர்ந்து பாலிவுட்வரை பிரபலமான இவர், தற்போது தளபதி விஜய் நடிப்பில் சர்கார் திரைப்படத்தினை இயக்கி வருகிறார். 

இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு மிக விமர்சையாக தயாராகி வரும் சர்கார் திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்திற்கான சிங்கிள் ட்ராக் கூட சமீபத்தில் ரிலீசாகி கலவையான் விமர்சனக்களை பெற்றிருக்கிறது. சர்கார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் பிறந்தநாள் சமீபத்தில் வந்தது.
அவர் கூட சர்கார் குழுவுடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் பிரபலமாகி இருந்தது. 
அப்போது ஏ.ஆர்.முருகதாஸை பாராட்டும் வகையில் அவர் எடுத்த திரைப்படங்களின் காட்சிகளுடன் ஒரு வீடியோ ஒன்றை சன் நிறுவனம் வெளியிட்டது.

அந்த வீடியோவில் ஏ.ஆர்.முருகதாஸ் இதுவரை இயக்குனராக பணியாற்றிய அனைத்து பட வீடியோக்களும் இடம் பெற்றிருந்தது. ஆனால் அஜீத் பட காட்சிகள் எதுவும் இடம் பெறவில்லை. 

இது அஜீத் ரசிகர்களை கோபப்பட வைத்திருக்கிறது. அஜீத் ரசிகர்களின் கோபத்திலும் நியாயம் இருக்க தான் செய்கிறது. ஏனென்றால் ஏ.ஆர்.முருகதாஸ் அறிமுகமானதே தீனா படத்தில் தான். அது தான் அவர் இயக்கிய முதல் படம். 
அதன்  பிறகு அஜீத்தும் முருகதாஸும் இணைந்து செய்யவிருந்த ஒரு படம் ஆரம்பத்திலேயே நின்றுவிட்டது. 

இன்றுவரை அஜீத்துக்கான கதை தன்னிடம் இருக்கிறது என முருகதாஸ் கூறிவருகிறார். ஆனால் எந்த படத்தையும் அஜீத்துடன் அவர் செய்யவில்லை. இதனால் முதல் படத்தில் தனக்கு கதாநாயகனாக இருந்த அஜீத்தையே மறந்துவிட்டாரே முருகதாஸ் என அவரை திட்டி தீர்த்துவருகின்றனர் அஜீத் ரசிகர்கள்.