ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்தாலும், ஒவ்வொரு படத்திலும் பெயர் வாங்கும் அந்த வித்தியாச நடிகர் மீது வில்லங்கமான புகார். தெரிந்த சில பெண்களுக்கு ராத்திரி 12 மணிக்கு பெல் போன் போட்டு நீண்ட நேரம் பேசுகிறாராம். "அவர் நிதானத்துலதான் போசுகிறாரா என்று தெரியல என சில புலம்பிகிறார்களாம் பாதிக்கப்பட்டவர்கள்.

பட்டம் படத்தில் அறிகமான நடிகை, முன்னணி நடிகர்களிடம் நெருக்கமாகப் பழகிவந்தார். திருமணத்திற்குப் பிறகு தற்போது நாசுக்காக விலகிச் செல்கிறாராம். காரணம் கேட்டால், "என் கணவர் என் மீது சந்தேகப்படவில்லை. முழுமையான சுதந்திரம் கொடுத்திருக்கிறார். அவருக்கு நம்பிக்கை துரோகம் செய்ய மாட்டேன்" என்று சாமர்த்தியமாக சமாளிக்கிறாராம்.

"சலோ' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமான நநடிகை ராஷ்மிக்கா மந்தனாவுக்கு அந்த படம் நல்ல பெயரை வாங்கி கொடுத்தது. அதன் பிறகு நடித்த 'கீதா கோவிந்தம்' படமும் ஹிட் அடிக்க, ராஷ்மிகாவுக்கு தற்போது வாய்ப்புகள் குவிகின்றதாம். அதனால் தன சம்பளத்தையும் அவர் உயர்த்திவிட்டார்.

நெப்போலியன் என்ற தெலுங்குப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிக்க வைக்க முன்னணி ஹீரோயின்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம்.

மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி, அதிதி ராவ் நடிக்கும் படத்துக்கு 'சைக்கோ' எனப் பெயரிட்டுள்ளனர். கிரைம் ஜானரில் உருவாகவிருக்கும் இப்படத்தில் நித்தியா மேனன், இயக்குனர் ராம் ஆகியோர் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

விஜய் சேதுபதி, சமந்தா நடித்திருக்கும் 'சூப்பர் டீலக்ஸ் படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளன. தியாகராஜன் குமாரராஜா, இயக்கியிருக்கு இப்படத்தை திரைப்பட விழாக்களுக்கு அப்பிய பின்னரே, தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய போகிறார்களாம்.

'பத்வாவாதி' படத்திற்குப் பிறகு இந்தப் படத்திலும் கமிட் ஆகாமல் இருந்த தீபிகா படுகோன், தற்போது 'XXX' ஹாலிவுட் படத்தில்   நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் . இதில் வாங்கி யுவான் என்கிற சீன நடிகரும் இந்த படத்தில் நடிக்க கமிட் ஆகியிருக்கிற.

நடிகை மஹிமா நம்பியார்  அவரால்  மறக்க  முடியாத ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இவரும் நடிகை சனுஷாவும், ரொம்ப க்ளோஸ் பிரண்ட்ஸ், எங்க போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்களாம். 'கொடிவீரன்' ப்ரோமோஷன் டைம்ல காஸ்ட்யூம் மாத்துவதற்கு ஒரு ரூம்முக்குள் சென்று நெடு நேரம் ஆகியும் வெளியே வராமல் செல்ஃபீ எடுப்பதில் தீவிரமாக இருந்தார்களாம். உள்ளே சென்ற இவர்களை காணோம் என்று அவருடைய அம்மா, கதவை தட்டி அலுத்து போய் பின் கதையின் மேலே ஏறி பார்த்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.