நயன்தாரா நடித்த படங்களிலேயே அதிக சர்ச்சைகளைச் சந்தித்துள்ள ‘கொலையுதிர் காலம்’ படத்தை வரும் வெள்ளிக் கிழமை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. வரும் வெள்ளியன்று வெளியாகவிருந்த இப்படத்துக்கு இன்று முன்பதிவு துவங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மறைந்த எழுத்தாளர் சுஜாதா எழுதிய கொலையுதிர் காலம் நாவலை அவருடைய மனைவியிடம் இருந்து 10 லட்சம் ரூபாய்க்கு தனது தாய் பெயரில் வாங்கியுள்ளார் பாலாஜி குமார். இவர் முன்னதாக ’விடியும் முன்’ என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.

இந்நிலையில் நடிகை நயன்தாரா நடிப்பில் ’கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் எட்செக்ட்ரா மற்றும் ஸ்டார் போலாரிஸ் என்ற தயாரிப்பு நிறுவனங்கள் தயாரித்துள்ள படத்தை ஜீன் 14-ம் தேதி வெளியிட திட்டமிட்டிருப்பதாக விளம்பரங்கள் வெளியானது.தன் தாயார் பெயரில் உரிமை பெற்று வைத்திருக்கும் ’கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் திரைப்படம் வெளியிடுவது காப்புரிமையை மீறிய செயல். எனவே ’கொலையுதிர் காலம்’ என்ற தலைப்பில் படத்தை வெளியிட தடைவிதிக்க வேண்டும் என பாலாஜி குமார் கோரியிருந்தார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷ்ணசாமி ராமசாமி, ’கொலையுதிர் காலம்’ என்ற பெயரில் நயன்தாரா நடித்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து மனுவுக்கு ஜின் 21-ம் தேதிக்குள் பதிலளிக்கும் படி படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.

இப்படத்தை முதலி தயாரித்த யுவன் ஷங்கர் ராஜா வெளியேறினார். அடுத்து இசையமைப்பாளராகவும் வெளியேறினார்.பின்னர் பின்னர் அடுத்த தயாரிப்பாளருடன் நயன்தாராவுக்கு சம்பளப் பிரச்சினை ஏற்பட்டது. அடுத்து நடந்த ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ராதாரவி நயன் குறித்து படு வில்லங்கமாகப் பேசி சர்ச்சையில் மாட்டினார். இவ்வளவு போதாதென்று லேட்டஸ்டாக கோர்ட் தடை. இத்தனை பிரச்சினகளுக்கும் காரணியான நயன் தனது காதலருடன் பிரான்சு தேசத்தில் உல்லாசப் பயணத்தில் இருக்கிறார்.