முன்னரெல்லாம் சிம்பு எந்த நிகச்சியில் கலந்து கொண்டாலும் அவர் பேச்சு பட்டைய கிளப்பிடும். ஆனால் சமீப காலமாக அவர் சந்தித்த சறுக்கல்கள் காரணமாகவோ என்னவோ இப்போது ஆளே மாறி இருக்கிறார் சிம்பு. தமிழ் திரையுலகில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்த இவர் சில ஆண்டுகளாக மாஸ் ஹிட் எதுவும் கொடுக்கவில்லை. அதயும் தாண்டி பல சர்ச்சைகளில் சிக்கி தவித்த இவர், இப்போது தான் கொஞ்சம் அமைதியாகவும் நிம்மதியாகவும் இருக்கிறார்.

தொடர் தோல்விகளின் போது கூட தோள் கொடுக்கும் ரசிகர்கள் சிம்புவிற்கு இருப்பதால் அவருக்கு இனி திரைத்துறையில் ஏறுமுகம் தான் என்பது போல பல முன்னணி இயக்குனரின் பட வாய்ப்புகள் வந்து குவிகிறது சிம்புவிற்கு. சமீபத்தில் கூட இயக்குனர் மணிரத்தினத்தில் இயக்கத்தில் செக்க சிவந்த வானம் திரைப்படத்தில் நடித்திருக்கிறார் சிம்பு.

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது கலந்து கொண்ட சிம்புவை மேடையில் பேச வருமாறு அழைத்திருக்கின்றனர். சிம்பு மேடை ஏறிய சில நிமிடங்களுக்கு கைதட்டலாலேயே அவரை அசர வைத்திருக்கின்றனர் ரசிகர்கள். ரசிகர்களின் அன்பால் உருகிப்போன சிம்பு ,மைக்கை பிடித்து அனல் தெறிக்க பேசுவார் என எதிர்பார்த்திருக்கின்றனர் ரசிகர்கள். ஆனால் சிம்புவோ ”நன்றி, அதை தவிற வேற எதுவும்  சொல்ல மாட்டேன்” என கூறி அடக்கமாக அமர்ந்துவிட்டாராம். 

இது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தினை கொடுத்திருக்கிறது. பேசினாலே ஏதாவது பிரச்சனை வந்துவிடுகிறது என்பதால் இனிமேல் அமைதியையே ஆயுதமாக்க சிம்பு முடிவெடுத்துவிட்டார் போல. எல்லாம் நன்மைக்கு தான். என்ன சர்ச்சைகளை கிளப்பினாலும் சிம்புவின் பேச்சு எப்பொதுமே ஸ்பெஷல் தான். அந்த ஸ்பெஷல் மிஸ் ஆவது தான் ரசிகர்களுக்கு கொஞ்சம் வருத்தம்.