உயிர் கொல்லி வைரஸான, கொரோனா பரவாமல் தடுக்க, இந்தியா முழுவதும் மத்திய அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் பிரபலங்கள் மற்றும் மக்கள் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

குறிப்பாக பிரபலங்கள் வீட்டிலேயே இருப்பதால், அவர்கள் உடல் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் வீட்டில் வேலை செய்யும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்கள்.

இப்படி தொடர்ந்து பிரபலங்கள் போடும் வீடியோக்களால் கடுப்பான, பிரபல பாலிவுட் பெண் இயக்குனர் ஃபரா கான், யாரையும் குறிப்பிட்டு சொல்லாமல், நடிகைகளை வெளுத்து வாங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில்...  "இது உங்கள் 'வொர்க்அவுட் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் இல்லை. இப்படி செய்து வரும் பிரபலங்கள் இதனை நிறுத்துங்கள். நம்மில் பலருக்கு கொரோனா பற்றிய பயம் தான் அதிகமாக உள்ளது. எனவே இதுபோன்ற செயலை செய்யவேண்டாம் என சற்று கோவமாக வெளுத்து வாங்கியுள்ளார்.