பாலிவுட் ஸ்டாருக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர்...! அப்படி எதை சொல்லி மிரட்டப்பட்டார் தெரியுமா..?

நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதே இவர்களுடைய வேலையா போச்சே என மனம் குமுறும் அளவிற்கு சென்று விட்டது இன்றைய  சினிமா உலகம்

எதற்காக இந்த டார்ச்சர்....எதற்காக இப்படி எல்லாம் என பல நடிகைகள் மனம் திறக்க தொடங்கி உள்ளனர்

அதில் குறிப்பாக நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல வன்புணர்வு ஆளான பிறகு நிறைய நடிகைகள் அவர்கள் சந்தித்த பாலியல்  தொடர்பான கொடுமைகளை பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வரிசையில் தெலுங்கு திரை உலகை ஆட்டிப்படைத்த, ஸ்ரீ ரெட்டி மிகவும் முக்கியமானவர் என்றே கூறலாம் 

இந்நிலையில், பாலிவுட் நடிகை மல்லிகா ஷெராவத் அவர் அனுபவித்த பாலியல் தொந்தரவு பற்றி மனம் திறந்து தெரிவித்து உள்ளார்

மர்டர் என்ற படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் மல்லிகா ஷெராவத். இவர் கூறும் போது..

"மர்டர் படம் வெளியான போது பல நடிகர்கள் என்னை படுக்கைக்கு அழைத்தனர். ஆனால் நான் அதற்கு உடன்பட்டு தான் வாய்ப்பை பெற  முடியும் என்ற சூழல் உருவான போது அதில் இருந்து விடுபட்டேன்... இதனால் பல பட வாய்ப்புகள் என்னை விட்டு சென்றது..அதற்கெல்லாம்  நான் தயங்கவில்லை... இன்றளவும் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்..

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, இந்த படம் வெளியான  சமயத்தில் ஒரு முதியவர் எனக்கு பல தொல்லைகள் கொடுத்தார்..... எனக்கு ஆதரவாக பேசுவதற்கு யாரும் முன்வரவில்லை....அப்போது நான்  மிகவும் தனிமை படுத்தப்பட்டேன்....புகார் கூறினால் என்னை பற்றியே  தவறாக கூற நினைத்தவர்கள் அவர்கள்..எனவே நான் புகார் அளிக்க  கூட முன்வர வில்லை என பேசி உள்ளார்

இவருடைய  இந்த பேச்சு மற்ற நடிகைகளையும் அவர்கள் சந்தித்த பல  பிரச்சனைகளை பற்றி வெளியில் சொல்ல முன் வருகின்றனர்.