உடலையே பிரதானமாக வைத்து சினிமாவில் வெற்றிக் கொடி நாட்டுவது நடிகைகள் மட்டுமல்ல, சில நடிகர்களும் அப்படித்தான். அந்த லிஸ்டில் அண்ணன் பெயர் முன் வரிசையில் இருக்கும் எப்போதும். ஆக்சுவலி அவருக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணமே இருந்ததில்லை. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் காட்டும் மாநிலத்தின் தலைநகரில் பிரிண்டிங் பீல்டில் செம்ம உத்தியோகத்திலிருந்த மனுஷன். உடம்பை ச்சும்மா செதுக்கி வெச்ச சிற்பம் போல்  மெயிண்டெய்ன் பண்ணுவது அவரோட வெறி விருப்பம். இவரோட பாடி பில்டிங்கை பார்த்துட்டு, நண்பர் ஒருவர் ‘சினிமாவுல சான்ஸ் டிரை பண்ணுய்யா’ என்றார். இவரும், வந்தா மலை போனா முடி! என்று சின்னதாய் ஒரு ட்ரை கொடுத்தார். உடனே க்ளிக் ஆகியது வாய்ப்பு. 

துவக்கத்தில் வெரைட்டியான வில்லன் வேடங்கள்தான் அண்ணனுக்கு வாய்த்தன. அப்பாலிக்கா ஹீரோவானார். நாயகனாக உயர்ந்து அண்ணன் நாட்டிய வெற்றிக்கொடிகள் ரொம்ப பெருசு. ஒரு கட்டத்தில் நடிகர்களின் சங்கத்துக்கே நாட்டாமையாகி போனாரென்றால் பார்த்துக்கோங்களேன். அது கெடக்கட்டும் ஒரு பக்கம்! ஃபீல்டில் அண்ணன் வீழ்த்தாத நடிகைகளே கிடையாது. பாறை போலிருக்கும் அவரது முரட்டு மேனியில் மோதி சிவக்காத தக்காளி, பப்பாளிகளே கிடையாது எனலாம். 

எத்தனையோ சேலை, சுடிதார், தாவணிகளை கடந்து வந்திருக்கிறார் அண்ணன். ஆனால் அவர் லயித்து, மயங்கியது அந்த வடநாட்டு வெள்ளை பூசணியிடம்தான். தலைவனுக்கு ஏற்ற ஹைட்டு, வெயிட்டு என்றிருக்கும் தகதக தலைவி. அம்மாம்பெரிய சூப்பருக்கே புது டிரெண்டை உருவாக்கி தந்த பேய் ஹிட்  கேங்ஸ்டர் படத்தில் தலைவிதான் ஹீரோயின். அந்த ஹிட்டுக்கு பிறகு அவருடைய மார்க்கெட் எங்கேயோ போய்விட்டது. தம்மாதுண்டு ஹீரோக்களை அவர் கண்டு கொள்வதில்லை. ஆனால் அவரே இறங்கி வந்து ஓ.கே. சொல்லியது நம்ம பாடிபில்டரின் பர்சனாலிட்டியை பார்த்துத்தான். 

பொதுவாக ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கும் போதுதான் நாயகிகளை வளைத்து தன் பின்னே நாய்க்குட்டி போல் சுற்ற விடுவார் அண்ணன். ஆனால் இந்த பொண்ணோடோ படத்துக்கு பூஜை போட்ட நாளில் இருந்தே புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டாகிவிட்டது. ஓ.எம்.ஆர். சாலையில் இரண்டு பேரும் இம்போர்டட் சூப்பர் பைக்கில் பறந்ததை பத்திரிக்கைகள் கிசுகிசுத்தன. விவகாரம் தலைவனின் வீட்டை எட்டியது. ‘வயசுக்கு வந்த ரெண்டு பொண்ணுங்களை வெச்சுக்கிட்டு, என்ன பழக்கம் இதெல்லாம்?’ என்று கொதித்தார் மனைவி. ஆனாலும் அண்ணன் அடங்கவில்லை. தொட்டுத் தொடர்ந்தது இருவருக்குமான நெருக்கம். 

மனைவிக்காக அவரது நண்பர்கள் சிலர் இவரிடம் தூது வந்தனர், அதில் ஒருவர் இவருக்கு மிக நெருக்கம். எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் ‘சரி, அந்த பொண்ணை விட்டு விலகிடுறேன்’ என்று எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை தலைவன். கடுப்பான அந்த நண்பன் ”ஆமாண்டா அந்த பொண்ணுக்கு ’மனசு’ ரொம்ப பெருசுதான், தாராளம்தான் ஒத்துக்குறேன்! இவ்வளவு பெரிய பாடிபில்டர் உன்னையே வெச்சு அடக்கிட்டாளே. ஆனா அதுக்காக அவளே கதின்னு கிடக்குறது என்ன நியாயம்? பல தடவை பார்த்தாச்சுல்ல, விட்டுட்டு விலகிவா.” என்று ஓப்பனாகவே சத்தம் போட்டுவிட்டார். 

ஆனால் மதி முழுக்க மயங்கிக் கிடந்தததால் தலைவனால் விலகியே வரமுடியவில்லை. அந்த நாயகியும் எத்தனையோ பேரோடு டூயட் போட்டும் இந்த பாடிபில்டரை போல் ஈக்குவல் பர்சனாலிட்டி என்று யாரையுமே ஏத்துக்க முடியவில்லை.  வாரம் இருமுறையாவது மீட் பண்ணுவதும், ஏக்கத்தை கொண்டாடித் தீர்ப்பதுமாகவே இருந்தனர். புருஷனை வாட்ச் பண்ணுவதற்காகவே ஸ்பெஷல் ஸ்பை டீம் ஒன்றை போட்டார் ஹீரோவின் மனைவி. ரகசிய போலீஸுக்கே ரகசிய போலீஸாரை நியமித்த கதைதான் அது. ரெண்டு பேரும் எங்கேயாவது எஸ்கேப் ஆவது தெரிந்தால் ஒற்றர்கள் மேடத்துக்கு போன் போடுவார்கள், உடனே அவர் புருஷனுக்கு போன் போட்டு ‘அங்கே எங்கே போறீங்க? நம்ம வீடு இந்த பக்கம்!’ என்று டைவர் பண்ணுவார். 

துவக்கத்தில் பயந்து பதுங்கி வீடு வந்து சேர்ந்த மனுஷன் ஒரு கட்டத்தில் துணிந்து அந்த நாயகியை தேடி போக துவங்கினார். எல்லாம் அந்த ’தாராள மனசு’ படுத்திய பாடுதான். விளைவு, குடும்பத்துக்குள் பெரும் பூகம்பம் வெடித்தது. நிரந்தரமாக மனைவியை விட்டு பிரிந்து வீட்டிலிருந்து வெளியேறினார். வெளியே வந்தவர் அந்த தாராளத்தைத் தானே தாரமாக்கினார்? என்று நீங்கள் நினைத்தால் தலையில் குட்டிக் கொள்ளுங்கள். யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ஒரு மேடத்தை கட்டிக் கொண்டு சித்தப்பாவாகிப் போனார். தலைவனுக்கு தாராளத்துடன் இருந்த தொடர்புகளெல்லாம் தெரியாமல், என்னடா நடக்குது இந்த உலகத்துல!ன்னு மொத்த தமிழகமும் மண்டை காய்ந்தது தனி கதை.