பிரபல இசையமைப்பாளர் கங்கையமரனின் மகனும் நடிகருமான பிரேம்ஜி அமரன் நடிக்க உள்ள படம் பற்றியும், அதில் பிக்பாஸ் நடிகை கமிட் ஆகியுள்ள தகவலும் தற்போது வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள பிரேம்ஜி, மாங்கா என்கிற படத்தில், கதாநாயகனாகவும் நடித்தார். ஆனால் அந்த படம் படுதோல்வியை தழுவியது. இந்நிலையில் இவர் அடுத்ததாக கதாநாயகனாக நடிக்க உள்ள படம் குறித்த தகவலையும், இந்த படத்தின் பெயரோடு கூடிய போஸ்டர் ஒன்றையும், பிரபல நடிகர் மாதவன் வெளியிட்டுள்ளார்.

‘சத்திய சோதனை’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில், பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடிய ரேஷ்மா நாயகியாக நடிக்கவுள்ளார். இந்த படத்தை சுரேஷ் சங்கையா என்பவர் இயக்கவிருக்கிறார். இவர் ஏற்கனவே ’ஒரு கிடாயின் கருணை மனு’ என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

காமெடி மற்றும் புதிய கருத்தை வலியுறுத்தும் படமாக இப்படம் உருகாக உள்ளதாக படக்குழுவினர் கூறியுள்ளனர்.
மேலும் சமீப காலமாகவே சமூக வலைத்தளத்தில் செம்ம ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வந்த ரேஷ்மா, எப்படியோ இந்த படத்தில் கதாநாயகியாக மாறிவிட்டார்