பிக்பாஸ் 2 நிகழ்சியின் வெற்றியாளராக ரித்விகா நேற்று அறிவிக்கப்பட்டார். அதற்கு அடுத்தப்படியாக  இரண்டாம் இடத்தை பிடித்த ஐஸ்வரா மிகவும் குதூகலமாக நடனமாடி சந்தோஷத்தில் மிதந்தார். சரி இதெல்லாம் இருக்கட்டும் பிக்பாஸ் சீசன் 1 மற்றும் பிக்பாஸ் சீசன் 2 இவை இரண்டிலும் டைட்டல் வின்னராக அறிவிக்கப்பட்ட ஆரவ் மற்றும் சீசன் இரண்டில் வெற்றி பெற்ற ரித்விகா இருவரும் இந்த நிகழ்ச்சியை மிக சிறப்பாக தொகுத்து வழங்கி வரும் கமலுக்கு இடது புறமாக தான் அழைத்து வரப்படுகிறார்கள் 

அதாவது பிக்பாஸ் சீசன் 1 இல் ஆரவ் வெற்றி பெற்ற பிறகு டைட்டில் வின்னர் என அறிவித்த உடனே கமல் அவரை உள்ளே இருந்து அழைத்து வந்த போது கமலுக்கு இடது புறமாக தான் அழைத்து வந்தார். அதே போன்று, பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட ரித்விகாவும்  கமலுக்கு இடதுபுறமாக தான் அழைத்து வரப்பட்டர்.

இதிலிருந்து, அடுத்து வரும் பிக் பாஸ் சீசன் 3 இல் கூட வெற்றி பெரும் நபர் இடது புறமாக தான் அழைத்து  வருவார்களோ என்ற சந்தேகம் எழுய்ந்துள்ளது.

மேலும் இடதுபுறமாக அழைத்து வருவது ஒரு விதமான லக்கியாக கருதப்படுகிறது போல..என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.