Asianet News TamilAsianet News Tamil

குட்டை உடையில் வளைந்து நெளிந்து கவர்ச்சி ஆட்டம்... வைரலாகும் பிக்பாஸ் பிரபலத்தின் ஹாட் டிக்-டாக்....!

அப்படி பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள கவர்ச்சி டிக்-டாக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Bigboss Reshma Hot Tik Tok Video Going Viral in social media
Author
Chennai, First Published May 6, 2020, 10:37 AM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'சன் சிங்கர்' நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராக அறிமுகமானவார் ரேஷ்மா. 
அதை தொடர்ந்து, 'வாணி ராணி', 'மரகத வீணை', 'உயிர்மெய்' போன்ற பல சீரியல்களில் நடித்தார். சின்னத்திரையை தாண்டி, வெள்ளித்திரையில் கடந்த 2015 ஆண்டு வெளியான 'மசாலா’ படத்தின் மூலம் அறிமுகமானார்.  இந்த படத்தை அடுத்து இவர் நடித்த 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் இவரின் புஷ்பா கதாப்பாத்திரம் மிகவும் பிரபலம். ரேஷ்மா பசுபலேட்டி பிரபல நடிகர் பாபி சின்ஹாவின் உறவினருமாவார். 

இதையும் படிங்க: சீரியல் நடிகையின் விவாகரத்திற்கு காரணம் இந்த நடிகரா?.... சின்னத்திரையில் தீயாய் பரவி வரும் தகவல்...!

பெற்றோரால் நிச்சயிக்கப்பட்ட தனது முதல் திருமணத்தில் தோல்வியடைந்த ரேஷ்மா, அமெரிக்காவில் வசிக்கும் போது மீண்டும் திருமணம் செய்துகொண்டார். அந்த காதல் தம்பதிக்கு அழகிய ஆண் குழந்தை இறந்தே பிறந்தது. இதையடுத்து இரண்டாவது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரையும் விவாகரத்து செய்துவிட்டு, தனியே வசித்து வந்த ரேஷ்மா. தற்போது மூன்றாவதாக நிஷாந்த் ரவிச்சந்திரன் என்பவரை காதலித்து வருவதாகவும் அவரையே திருமணம் செய்து கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கோடி, கோடியாய் கொடுத்தாலும் அவர் மட்டும் வேண்டாம்... வாரிசு நடிகரை ஒதுக்கும் காஜல் அகர்வால்?

ரசிகர்களால்  குணச்சித்திர நடிகையாக அறியப்பட்ட  ரேஷ்மா, கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினர்.  பெரிதாக எந்த ஒரு அவப்பெயரும் இன்றி வெளியேறி நியூட்ரல் ரேஷ்மா என பெயர் எடுத்தார். அவ்வப்போது, சமூகவலைதளத்தில் தன்னுடைய அழகிய புகைப்படங்களை வெளியிட்டு, பட வேட்டை நடத்த தொடங்கினார். அதன் பயனாக தற்போது ரேஷ்மா, பேய்மாமா, போடா முண்டம், மை பர்பெக்ட் ஹஸ்பேண்டு ஆகிய மூன்று படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: கணவருடன் ஓவர் நெருக்கம்... சாய் பல்லவி நடிப்பை பார்த்து பொறாமைப்பட்ட சமந்தா?

தற்போது கொரோனா பிரச்சனை ஷூட்டிங் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் அனைத்தும் வீடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். அதே சமயத்தில் பொழுபோக்குவதற்காக டிக்-டாக்கில் இணையும் பிரபலங்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அப்படி பிக்பாஸ் ரேஷ்மா வெளியிட்டுள்ள கவர்ச்சி டிக்-டாக் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. குட்டை உடையில் டாப் ஆங்கிளில் தாரளமாக கவர்ச்சி காட்டியுள்ள ரேஷ்மாவின் அந்த வீடியோ லைக்குகளை குவித்து வருகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios