பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த நித்யா இப்படி ஒரு முடிவில் உள்ளாரா..?

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் 2. இந்த நிகழ்ச்சியில், தாடி பாலாஜி, அவருடைய மனைவி நித்யா, பொன்னம்பலம், நடிகை யாஷிகா, ஜனனி ஐயர் உள்ளிட்ட பல  பிரபலங்கள் போட்டியாளராக கலந்துக்கொண்டு உள்ளனர்

வாரம் தோறும் ஒவ்வொரு போட்டியாளர்கள் நிகழ்ச்சியில் இருந்து  வெளியேற்றப் படுவார்கள். அந்த வகையில், நேற்றைய முன்தினம்  ஞாயிற்றுக்கிழமையன்று தாடி பாலாஜியின் மனைவியான நித்யா வெளியேற்றப்பட்டார்.

அப்போது, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி, கமல் முன்  நின்ற நித்யா மற்றும் அருடைய மகள் போஷிகா தாடி பாலாஜியுடன்  பேசினார்

7 மாதங்களுக்கு பின் தன் மகளை பார்க்க முடிந்ததாக தாடி பாலாஜி தெரிவித்து இருந்தார். அதற்காக கமலுக்கு நன்றி தெரிவித்தார் பாலாஜி.

அப்போது, போஷிகா தன் அப்பாவுடன் பேசிய விதம் மற்றும் தாடி பாலாஜி பேசிய விதம் மற்றும் இருவரும் லவ் யூ போத் என  தெரிவித்துக்கொண்ட அனைத்து நிகழ்வுகளும், பிரிந்து இருந்த இருவரும்  ஒன்று சேர்ந்து விடுவார்கள் என்றே எண்ண வைத்து உள்ளது

ஆனால் இது குறித்து பேசி உள்ள நித்யா, “மேடையில் என் பெண் பேசியது அவளாக பேச வில்லை....அவளிடம் இப்படி பேசு, நீ இப்படி கேளு என நிறைய சொல்லி கொடுத்து உள்ளார்கள்.

மேலும், அங்கு பேசினது எடிட் செய்து தான் ஒளிப்பரப்பப்பட்டு உள்ளது  

பிக்ப்பாஸ் வீட்டில் நான் நானாக தான் இருந்தேன்....அதனால் தான் அங்கு செட் ஆகல...எனக்கு பாலாஜி மீது அன்பு இருக்கு..ஆனால் அவர் அதனை தக்க வைத்துக்கொள்ள வில்லை ....

மேலும் ஒரு சிலர் நான் தாடி பாலாஜி மனைவி என்பதால் தான், எனக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வாய்ப்பு கொடுத்து உள்ளனர் என்று கூறி வருகின்றனர்.. அப்படியே இருந்தாலும் இது ஒரு வாய்ப்பு தான்..அதற்காக நானும் அவரும் சேர்ந்து விடுவோம் என மற்றவர்கள் நினைத்தால் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் இருந்தே பாலாஜி என்னிடம் வெறுப்பாக தான் இருந்தார்..பின்னர் சில நாட்களில் திருந்தி விட்டது போல் இருக்கிறார்.

அவர் எங்கே எப்படி இருப்பார் என்பது எனக்கு நன்றாக தெரியும்.. ஏனெனில், நான் அவருடன் வாழ்ந்து இருக்கிறேன்...நான் வரும் போது கூட, பாலாஜி என்னை கிண்டல் செய்து கேலியாக மற்றவர்களிடம் பேசிட்டு இருந்தர்..அப்போது கூட நான் சொலிட்டு தான் வந்தேன்...நீ உள்ளவே இரு..நான் வெளியே போய் டைவர்ஸ்க்கு தேவையான  அனைத்தையும் வக்கீல் வைத்து முடிக்க பார்க்கிறேன் என தெரிவித்து உள்ளார்.