காமெடி நடிகர் பாலாஜியின் மனைவி, திரைப்படங்களில் நடித்த பிரபலம் இல்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

இதன் மூலம் இவருக்கும் தற்போது பல ரசிகர்கள் உருவாகியுள்ளனர். மேலும் நித்யாவும் ஊடகங்களுக்கு, பேட்டிகள் கொடுப்பதிலும் தன்னுடைய ரசிகர்களை சந்திப்பதிலும் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி, மீண்டும் நித்தியாவை அவருடைய கணவருடன் இணைத்து வைத்துள்ளது. தற்போது பாலாஜியுடன் நிதியாவும் இணைந்து சில பேட்டிகளும் கொடுத்து வருகிறார். விரைவில் இவர்கள் ஒன்றாக இணைய வேண்டும் என ரசிகர்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் நித்யா தன் ரசிகை ஒருவருடன் சேர்ந்து பைக்ரைடு செய்யும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 

இது குறித்து அவர் கூறுகையில், பைக் ரைடு செய்யும் பெண், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தன்னைக்கு கிடைத்த ரசிகை என்றும், முதல் முறையாக தான் இப்போது தான் பைக்கில் செல்வதாக தெரிவித்துள்ளார். எப்படியோ டைட்டில் கைப்பற்ற வில்லை என்றாலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கென ரசிகர்களை பெற்று விட்டார் நித்யா.