பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசன்னில் மிகவும் கோவக்காரர், என்கிற பட்டத்திற்கு பொறுத்தமான மனிதர் நடிகர் கஞ்சா கருப்பு. உப்பு சப்பு இல்லாத விஷயத்திற்கு கூட பரணியை அடிக்க சிலிண்டரை தூக்கி சர்ச்சையில் சிக்கினார். இதனால் எதிர்ப்பாராத விதமாக இரண்டாவது வாரமே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

நெகட்டிவ் கமெண்ட்ஸ் பெற்று இவர் வெளியேறியதால், அதிகமாக இவர் எந்த ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிக்கு பேட்டிகள் கொடுப்பதை தவிர்த்து விட்டார்.

கடந்த வருடம் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற அனைவரும் தற்போது திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் நிலையில் இவர் மட்டும் ஆளையே காணோம்... என தேடியவர்களும் உண்டு. இவர் மக்களின் எதிர்ப்பபை சம்பாதித்தால் இவருக்கு பட வாய்புகள் எதுவும் இல்லை என்று கிசுகிசுக்களும் வந்தது. 

இவ்வளவு நாள் சைலேன்ட்டாக இருந்த இவர், மூன்று பெரிய படங்களில் நடித்து முடித்து விட்டார். அடுக்கடுக்காக அந்த படங்கள் வெளியாக உள்ளது. தற்போது இவர் களவாணியை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ளார். மேலும் சண்டகோழி 2, நாடோடிகள் 2 படத்திலும் நடித்து வருகிறார். ஏற்கனவே வெற்றி பெற்ற இந்த படங்களில் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவதால் மீண்டும் கஞ்சா கருப்பு கோலிவுட் திரையுலகில் மற்றொரு ரவுண்டு வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.