செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த "துள்ளுவதோ இளமை" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஷெரின். முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த ஷெரின், அதற்கு அடுத்து ஸ்டூடண்ட் நம்பர் ஒன், விசில் போன்ற படங்களில் நடித்தார். அதன் பின்னர் பெரிதாக பட வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் திடீரென பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக தோன்றிய ஷெரின் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

இதையும் படிங்க: இதுவரை இல்லாத உச்ச கட்ட கவர்ச்சியில் நடிகை பூமிகா... டாப்லெஸ் போட்டோவால் திகைத்து போன ரசிகர்கள்...!

ஸ்லீம்மாக இருந்த ஷெரின், ஓவர் வெயிட் போட்டு குண்டானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷெரினின் தோற்றம் நெட்டிசன்களால் கிண்டல் செய்யப்பட்டது. அதன் பின்னர் கடுமையாக முயன்று உடல் எடையை குறைத்த ஷெரின், இளம் நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு பழைய படி ஹீரோயின் லுக்கிற்கு மாறினார். 

ஹீரோயின் லுக்கிற்கு மாறி என்ன பிரயோசனம், பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டாமா...?. அதற்காக ஹாட் போட்டோ ஷூட் என்ற அஸ்திரத்தை கையில் எடுத்த ஷெரின், தனது கலக்கலான கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். படவாய்பிற்காக தான் ஷெரின் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்தார் என்று பார்த்தால். அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல, அது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளராக பங்கேற்ற தர்ஷனுக்காக என்று கூறப்படுகிறது. சமீபத்தில் சனம் - தர்ஷன் பஞ்சாயத்து உச்சகட்டத்தில் பற்றி எரிந்த சமயத்தில் கூட, ஷெரின் ஹாட் போட்டோ ஷூட் ஒன்றில் பங்கேற்றிருந்தார். 

இதையும் படிங்க: சும்மா கெத்தா.. செம்ம ஸ்டைலா... ஐதராபாத் விமான நிலையத்தை கலக்கிய நயன்தாரா..!

டுவிட்டர், இன்ஸ்டா என அனைத்து சோசியல் மீடியாவிலும் ஒரு கலக்கு கலக்கிய ஷெரின். தற்போது புதிதாக இணைந்துள்ளது டிக்-டாக்கில், அதில் விதவிதமான பாடல்களுக்கு அசத்தலாக நடனமாடி ரசிகர்களை கிறங்கடிக்கிறார். இந்நிலையில் படுக்கையறையில் தோழியுடன் ஷெரின் போட்டுள்ள குத்தாட்ட வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

ஆங்கில பாடல் ஒன்றிற்கு அசத்தல் மார்டன் உடையில் படுக்கையில் ஆட்டம் போட்டுள்ள ஷெரின், அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தோழியுடன் ஷெரின் போட்ட அந்த ஆட்டம் இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.