மாடலான அபிராமி ஏராளமான விளம்பர படங்களில் நடித்து வந்தார். சமீபத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அபிராமியின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பின்னர் விஜய் டி.வியின் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்பாளராக கலந்து கொண்டார் அபிராமி. வீட்டிற்குள் வந்ததுமே கவினை காதலிப்பதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்ட அபிராமி, அதன் பின்னர் முகேனை காதலிப்பதாக அறிவித்தார். அவரும் காதலை ஏற்காததால் அபிராமியின் அனைத்து காதலும் தோல்வியில் முடிந்தது. 

தற்போது சினிமாவில் நடித்து வரும் பிக்பாஸ் அபிராமி, தனது கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வருகிறார். பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக அதிரடி கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தி வரும் அபிராமி, அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். ஓவர் கிளாமரில் அபிராமி பதிவிடும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானாலும், அவரது ரசிகர்கள் அதனை ஏற்பதில்லை. இப்படி எல்லாம் டிரஸ் போட்டு போட்டோ போடாதீங்க என அட்வைஸ் செய்து வருகின்றனர். இதை எதையும் காதில் வாங்காத அபிராமி, தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

சமீபத்தில் வெள்ளை நிற உடையில் முன்னழகு தெரியும் படி ஹாட் போஸ் கொடுத்துள்ள அபிராமி, செம்ம ஸ்டைலாக சிவப்பு நிற கார் மீது சாய்ந்து நிற்கும் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் மாடலிங்கில் பிசியாக நடித்து வரும் அபிராமி, அங்கு எடுக்கப்படும் ஓவர் கிளாமர் போட்டோக்களையும் இன்ஸ்டாவில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார். அப்படிப்பட்ட அதிரடி கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தாலும், இது எல்லாம் போய் முடியப்போகுதோ என அபிராமியின் ஆர்மி கடுப்பாகியுள்ளது.