தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானத்தில், மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டியில் பிக்பாஸ் புகழ் பரணி சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டதோடு, ஏழை   மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி அவர்களுக்கு ஊக்கம் அளித்தார் 

நாடோடிகள் படம் மூலம் அறிமுகமான நடிகர் பரணி பின்னர் பல படங்களில் நடித்து மக்கள் மத்தியில் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டம் கொண்டவர். அதுவும் பிக்பாஸ் நிகழ்சிக்கு பின்னர் மிகவும் பிரபலம் அடைந்த பரணி தற்போது பல படங்களில் கமிட் ஆகி  உள்ளார்.

வெளிவரவுள்ள நாடோடிகள் 2 லும், மிக சிறப்பாக அவருக்கே உண்டான இயல்பான நடிப்பில் வெளியான ப்ரோமோ நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் தற்போது பெரும் எதிர்பார்ப்பை கிளப்பி உள்ளது.

நடிகர் பரணியை பொறுத்தவரை நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் சமூக சேவைகளில் சிறந்து விளங்கி வருகிறார்.அதன் ஒரு பகுதியாக கடந்த 4 ஆம் தேதியான சனிக்கிழமையன்று மதுரையில் நடைப்பெற்ற மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியில் பங்கேற்ற பள்ளி, மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி உள்ளார்.

மேலும், பல விளையாட்டு மாணவர்களுக்கு, ஸ்போர்ட்ஸ் ஷூ முதல்  ஆடை வரை  பரிசாக கொடுத்து அசத்தியுள்ளார். மேலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பை கொடுத்து கவுரவித்து, அவர்கள் மென்மேலும் வளர தான் தொடர் உதவி செய்வதாக நடிகர் பரணி கூற, நெகிழ்ந்து போன மாணவர்கள் பரணிக்கு  நன்றியை தெரிவித்து உள்ளனர்.

தன் சொந்த ஊரான மதுரையில்,பிக்பாஸ் புகழ் பரணியின் இந்த செயலுக்கு மக்கள் மத்தியில் மேலும் மவுசு கூடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.